ரோமாபுரிப் பாண்டியன்
337
ரோமாபுரிப் பாண்டியன் 337 புறமுதுகிட்டு ஓடும் காட்சியைக் காண்போம் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லைதான்! ஆனாலும், இந்த எதிர்பாராத நிகழ்ச்சி குறித்து அவன் மனத்திலே எந்தவிதக் கருத்தும் ஏற்படுவதற்கு முன்பு, ஒரு கோரக்காட்சியைக் கண்டு திடுக்கிட்டான்! இருபுறத்து வீரர்களும் அவ்வளவு நேரம் அங்கே போராடிக் கொண்டிருந்தபோது, மலைப்பாம்புடன் போராடிக் கொண்டிருந்த முத்துநகை, மலைப்பாம்பின் விரிந்த வாய்க்குள் தன் தலையை உணவாகத் தரப்போகும் காட்சியைத்தான் மன்னன் கரிகாலன் கண்டுவிட்டான் அப்போது! மறுகணம் கீழே கிடந்த வேல் ஒன்றை எடுத்து வீசினான் முழுப்பலத்துடன். அருகிலே ஓடி, மீண்டும் அந்த வேலினாலேயே மலைப்பாம்பின் உடலைத் தாக்கினான்! மலைப்பாம்பு கீழே விழுந்தது, அதன் பிடி தளர்ந்தது. நழுவியது! விடுபட்ட முத்துநகை கண்விழிக்காது கிடந்தாள். மன்னன் அவள் முகத்தருகே குனிந்தான். "வீரனே! என்னைப் பார்!” என்று அழைத்தான்! மெதுவாகத் திறந்த முத்துநகையின் விழிகள் எதிரே மன்னனைக் கண்டு திடுக்கிட்டன! அரசே...!' வீறிட்டலறிய அவள் அவன் பாதத்திலே முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள்! பரிவுடன் - பாசத்துடன் கோச்செங்கணானைத் தூக்கினான் மன்னன் கரிகாலன்!