ரோமாபுரிப் பாண்டியன்
347
ரோமாபுரிப் பாண்டியன் 347 விட்டது! “அரசே! நம்மையும் மீறிய சதி ஒன்று நடந்துவிட்டது என்று கருதுகிறேன்! என்ன செய்வது இப்போது?" என்றாள். உடனே கரிகாலன் 'முத்துநகை! செழியனை இனிமேல் இங்கே தேடிப் பயனில்லை என்று நான் நினைக்கிறேன்! ஆகவே நாம் இப்போது உடனே பூம்புகாருக்குச் சென்றாக வேண்டும்! கொந்தளிப்புக்கும் குமுறலுக்கும் இடையே நான் அங்கிருந்து புறப்பட்டேன்! இப்போது அங்கே என்ன நேர்ந்திருக்கக்கூடும் என்பதை என்னால் யூகித்துப் பார்க்க முடியவில்லை! புறப்படு!" என்றான். இந்த நேரத்தில் அதைத் தவிர வேறு என்ன செய்வது என்பது முத்துநகைக்கும் புரியவில்லை. தலையசைத்தாள், நடக்க ஆரம்பித்தாள்! போகும் போது இருந்த ஆவலும், ஆர்வமும் திரும்புகிற நேரத்தில் முத்துநகையிடம் இல்லை; துவண்டு விழத்தயாராக இருந்த உடலை எப்படியோ தூக்கி நிறுத்தி நடத்திச் சென்று கொண்டிருந்தாள். வழியிலே காட்டுச் சுனை கண்களில் பட்டவுடன் அவளது உள்ளம் மேலும் வேதனையுற்றது! பாண்டிய நாட்டு ஒற்றன் வீரபாண்டியயைச் சந்தித்துத் தனது உள்ளத்தைப் பறிகொடுத்தது அந்த இடம்தானே! ஒரே இலட்சியத்துக் காகப் போராடி வந்த இதயங்கள் இணைந்ததை - கடமைக்கு இடையே யும் காதல் விளையாட்டுக்களில் ஈடுபட்டதை - அந்தச் சுனைக்கு மட்டும் பேசும் சக்தியிருந்தால் கதை கதையாகச் சொல்லுமே! அதோ ... அந்தச் சுனை நீர் காற்றின் வேகத்தால் இங்கும் அங்கும் அசைகிறதே; அது ஏன்? தன்னுடைய காதலனை இருங்கோவேளின் கத்திக்கு உணவாகத் தந்து விட்டுத் தனிமரமாய்ச் செல்கிறாளே முத்துநகை என்ற வேதனையால் தத்தளிக்கிறதா? முத்துநகையின் உள்ளம் எரிமலையாக மாறத் தயாராகிக் கொண்டி ருந்தது. அதைத் தவிர்த்து விடலாம் என்ற நினைவுடன் தனது பார்வை யைச் சுனையிலிருந்து நகர்த்திப் பாழ்மண்டபத்தை நோக்கி ஏவினாள்; ஆனால், மறுகணம்... அவளது விழிகள் வியப்பால் திடுக்கிட்டன! அங்கே... சற்றுத் தூரத்தில் இருந்த பாழ்மண்டபத்தில் அவள் ஓர் உருவத்தைக் கண்டு திகைத்து விட்டாள்! மனித நடமாட்டமில்லாத அந்தப் பகுதியிலே தோன்றும் அந்த உருவம் யாருடையது? முத்துநகை கூர்ந்து நோக்கினாள். அந்த நிமிர்ந்த நெஞ்சு... உயர்ந்த தோற்றம் உடை... நடை... உருவம்...