ரோமாபுரிப் பாண்டியன்
355
ரோமாபுரிப் பாண்டியன் 14 355 "அய்யோ! அப்படியானால் அரசருக்கான ஆபத்து அரண்மனைக் குள் நுழைந்து விட்டது என்பதுதானே பொருள்." "இன்னும் கேள், இன்றிரவு நடுச்சாமத்தில் இருங்கோவேள், யவனக் கிழவர் வேடத்தில் வந்து அரசனைக் கொல்வதற்குத் திட்டமிட்டிருக் கிறான். அத்திட்டத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் உள்ளேயிருந்து தாமரை செய்து முடிக்கப் போகிறாள். மாளிகைக்குப் பக்கத்தில் அரசனின் ஆலோசனை மண்டபத்தை ஒட்டினாற் போலுள்ள சோலைவழியேதான் யவனக் கிழவர் உருவில் இருங்கோவேள் வரப் போகிறான். அவனை வரவேற்பதற்கு வேளிர்குல வீரன் தயாராக இருப்பான்!' - இதைக் கேட்டதும் முத்துநகையின் மெய் சிலிர்த்தது; குரல் நடுங்கியது; பேச முடியாமல் தவித்தாள். ""இருங்கோவேள்! இன்றிரவோடு அவனுக்கு முடிவு ஏற்பட்டு விடும். இப்போதே அரண்மனைக்குச் சென்று வீரர்களைக் கோட்டை முழுவதும் பரவலாக ஒளிய வைக்கச் செய்கிறேன். இருங்கோவேள் வந்ததும் உடனே அவனுக்கு அழிவு! அஸ்தமனம்!' எனக்கத்தினாள் முத்துநகை! பைத்தியமே! சொல்வதைக் கேள்! இந்தச் சதித் திட்டம் நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது. பூம்புகார் அரண்மனை வீரர்களில் பலர் கரிகாலருக்கு எதிரிகள் - பகைவனின் கூலிகள். மன்னரின் சாவுக்கு அவர்களும் வெற்றிலை பாக்கு வைப்பவர்களேதாம், அதனால் இந்தச் செய்தி மன்னருக்கே கூடத் தெரியக்கூடாது. நீ இப்போதே சென்று யவனக் கிழவரின் வருகையை எதிர்பார்த்திரு! நான் செழியனைப் பற்றிய தகவல் அறிந்து கொண்டு எப்படியும் இருங்கோவேளுக்கு முன்பு மாளிகைக்கு வந்து உன்னைச் சந்தித்து விடுகிறேன். நான் வருவதற்கு முன்பு ஒரு வேளை இருங்கோவேள் முந்திக் கொண்டால் அவனை இந்தக் கட்டாரிக்கு இரையாக்கி விடு! இந்தா!' வீரபாண்டி தந்த கட்டாரியை முத்துநகை தன் கையில் வாங்கிக் கொண்டாள். அவள் முகம் சிவந்தது. குளிர் சிந்தும் கண்கள் கொள்ளிக் கட்டைகளாயின! 'இருங்கோவேள்' என்று தனக்குத்தானே உறுமினாள். இன்றோடு தொலைந்தாய் நீ!" என்று கர்ச்சனை செய்தாள். அவளைத் தழுவிக்கொண்டு, அவளது உதடுகளை ஈரமாக்கினான். வீரபாண்டியெனும் இருங்கோவேள். அனல் உமிழ்ந்து கொண்டிருந்த அவளது விழிகள், கையிலிருந்த கட்டாரியை நோக்கின. அதில் சில எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தன.