உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

கலைஞர் மு. கருணாநிதி


360 "ம்-வரட்டும்! வரவிடு!" கலைஞர் மு. கருணாநிதி அரசனின் ஆணை கேட்டு வெளியில் ஓடிய மெய்க்காவலன் வளவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான். வளவன் மன்னனை வணங்கி நின்றான். மெய்க்காவலன் ஒதுங்கியிருந்து மன்னனின் கட்டளைக்குக் காத்து நின்றான். அரசன் அவனை வெளியில் போகச் சொல்லவில்லை. . வளவன் மன்னரின் காதோரம் அணுகிச் சென்று, "ஆபத்தான செய்தியொன்று, அதனை அறிவிக்க வந்தேன்!" என்றான். “என்ன-அப்படி ஆபத்து?" என்றான் வேந்தன். "ஆயிரம் புலிகள் எதிர்த்து வந்தாலும் நெஞ்சு குலுங்காத வீரர் தாங்கள் என்றாலும், என்னால் இந்தச் செய்தியைச் சொல்லாமலிருக்க முடியவில்லை!" என்று வளைந்து நெளிந்தான் வளவன். "பரவாயில்லை...சொல்லுங்கள்!' என்று அவசரப்படுத்தினான் கரிகாலன். வளவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு மெல்லிய குரலில் பேசினான்: "அரசே, இருங்கோவேளின் தங்கை தாமரையுடன் வந்திருக்கிறானே ஒரு வேளிர்குல வீரன்; அவன் மூலம் தங்கள் உயிருக்கு ஆபத்து வரக் காத்திருக்கிறது!' 4+ “என்ன?” மன்னரது இந்தக் கேள்வியிலே தெரிந்த கோபத்தைக் கண்டு வளவன் சிறிதும் அதிர்ச்சி அடையவில்லை. $ "உண்மைதான் மன்னவா!" என்றான் வளவன். "அவன் வேளிர்குடி வீரனாக இருந்தும், நம்மவர்கள் அவனை உயிரோடு உலவ விட்டு வைத்திருக்கிறார்களே; அதற்கு நன்றியா இது?' எதிரிகள் நடக்கின்ற பாதையிலே நீங்கள் பூ தெளித்தாலும் உங்களுடைய பாதையிலே முள்ளை வாரி வீசத்தான் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்! சேசே! அவனா? நானிருக்குமிடத்தில் அவனால் நுழையக்கூட முடியுமா?" "இல்லை மன்னா! சதி வேறுவிதமாக உருவாகிறது! இருங்கோவே ளுக்கும் நமது அரண்மனைக்குள்ளிருக்கும் அந்த வேளிர் வீரனுக்கும் இடையிலே செய்திகள் போய் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி எனக்குக் கிடைத்த தகவலைச் சொல்லுகிறேன் கேளுங்கள்; இன்று