ரோமாபுரிப் பாண்டியன்
365
ரோமாபுரிப் பாண்டியன் 365 பயம். ஏதுமறியாதவனைப்போல் ஓரக் கண்ணால் தன்னைத் தொடர்ந்து மறைந்து வருபவனை அவன் கவனித்தான். கரிகாலனின் மெய்க்காப் பாளன்தான் அந்த ஒற்றன் என்பதைப் புரிந்து கொண்டான். திடுமென அவன் ஏன் தன்னைத் தொடர வேண்டும்? கேள்விக் குறி அவனை உலுக்கியது. வளவனின் எச்சரிக்கைக்குப் பிறகு, மன்னன் மெய்க்காப் பாளனிடம் செழியனைக் கண்காணிக்குமாறு பணித்திருக்கிறான் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்? மன்னனின் ஆணைக்கிணங்க மெய்க்காப்பாளன், செழியனை நிழல் போலத் தொடர ஆரம்பித்து விட்டான்! ‘ஆனது ஆகட்டும்' என்ற துணிவுடன் தன்னை யாரும் தொடர்ந்து வராதது போலவே நடித்த வண்ணம் செழியன், தாமரை தங்கியிருக்கும் பளிங்கு மாளிகைக்குள் நுழைந்தான். வாயிற்புரம் வரையில் தன்னைத் தொடர்ந்து வந்த மெய்க்காப்பாளன் மறைந்து விட்ட அதிசயத்தையும் அவன் கண்டான். வாயிற்புத்தில் அமைக்கப்பட்டிருந்த ரகசியக் கதவு ஒன்றினைத் திறந்து கொண்டு செழியனுக்கு முன்பாக மாளிகையின் உட்பகுதிக்குள் நுழைந்து விட்டான், அந்த மெய்க்காப்பாளன். அதை உணராத செழியன், தாமரை ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கூடத்திற்குள் புகுந்தான். அச்சமும் கவலையும் தோய்ந்திருந்த தாமரையின் முகத்தை அவன் கண்டு அப்படியே நின்று விட்டான். தாமரை, அவனைப் பார்த்ததும் நெஞ்சு மேலும் புடைக்கப் பெருமூச்செறிந்து, "வந்து விட்டீர்களா?" என்று கேட்டாள் பரபரப்புடன், வேளிர் படை வீரனை. அந்த நாட்டு இளவரசி இவ்வளவு மரியாதை யுடன் அழைப்பதைப் பார்த்து மெய்க்காப்பாளன் வியப்படைந்து மேலும் அவர்கள் உரையாடலைக் கூர்ந்து கவனித்தான். "ஓடி விட்டேனோ என்ற சந்தேகம் ஏற்பட்டதல்லவா?" "இல்லை, உங்கள் வாக்குறுதியில் எனக்கிருந்த நம்பிக்கை சிறிதும் தேயவில்லை. பூம்புகார் வீரர்களிடம் ஏதாவது விபரீதமான தகராறுகள் ஏற்பட்டு உண்மை வெளியாகிவிட்டதோ என்று அஞ்சினேன்; அவ்வளவு தான்.' 66 'அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சவ அடக்கம் முடிவுற்றதும் ஏதேதோ நினைவுகள் அலைக்கழிக்க அரண்மனையில் கால் போன பக்கமெல்லாம் போய் விட்டு. இறுதியில் இங்கு வந்து சேர்ந்தேன். மன்னரைப் பார்த்தால் விடை பெற்றுக் கொண்டு புறப்படலாமென்று கருதினேன்." "நாம் புறப்படலாமா?"