380
கலைஞர் மு. கருணாநிதி
380 கலைஞர் மு.கருணாநிதி தான். மன்னனின் சிந்தனையோ கலைவதாக இல்லை. எழுப்புவதோ கூடாது. சிறிது நேரம் நின்று பார்த்து விட்டுப் பிறகு ஓலைச்சுவடியை மன்னனுக்கருகினில் தென்படக் கூடிய ஒரு யானைத் தந்த முக்காலியில் வைத்தான். வெளியில் வந்து கதவைச் சாத்திவிட்டு அவனும் மற்ற வீரர்களும் மன்னனுக்குப் பாதுகாப்பளிப்பதில் தீவிரமாக முனைந்தனர். சிந்தனையிலீடுபட்ட வேந்தன் இன்னும் விழிக்கவில்லை. அவன் எதிரே ஓலைச்சுவடி காத்திருக்கிறது. அதை அவன் பிரித்துப்பார்த்தால் அதிலிருந்து எத்தனை எத்தனை மாற்றங்கள் ஏற்படுமோ யார் கண்டது? சிந்தனையிலாழ்ந்த செங்கோலேந்தி விழித்துக் கொள்ளா வண்ணம் அந்த ஓலைச் சுவடியை நோக்கி மிக மெதுவாக அடிமேல் அடி வைத்து அந்த அறைக்குள் ஓர் உருவம் வருகிறதே, அது யாருடைய உருவம்? எங்கே வருகிறது? யார் வருகிறது ? தன்னையொத்த தமிழ்ப் பெரியவர் அவதூறுக்கு இலக்காகி அடைப்பட்டுக் கிடப்பது கண்டு அகமும் முகமும் வாடி அல்லலுற்ற கடியலூர் உருத்திரங்கண்ணனார். காரிக்கண்ணனாரை விடுவிக்காமல் பூம்புகாரை விட்டுச் செல்வதில்லையென்று உறுதியெடுத்துக் கொண் டார். பாண்டியத் தளபதி நெடுமாறனும் திரும்பி மதுரைக்குச் செல்லாமல் பூம்புகாரிலேயே தங்கிவிட்டான். தான் படைகொண்டு வந்ததையும், வழியிலேற்பட்ட நிகழ்ச்சிகளை யும் பூம்புகாரில் நடைபெறும் புதுமைகளையும், ஓலைவாயிலாகப் பெருவழுதிப் பாண்டியனுக்குத் தெரிவித்திருந்தான். அதற்கு உடனடி யாகப் பாண்டிய வேந்தனிடமிருந்து பதில் வந்துவிட்டது. அந்த மடலில் கண்டவாறு இன்னும் சில நாட்கள் அவன் பூம்புகாரில் தங்கிட வேண்டி யது இன்றியமையாதது ஆயிற்று. அந்த நாட்களில் காரிக்கண்ணனார் களங்கமற்றவர் என மெய்ப்பிப்பதற்கு ஏதாவது சான்றுகள் கிடைக்காதா என்று அவன் தேடிக் கொண்டிருந்தான். கடியலூரார், கரிகாலனைச் சந்தித்து அதுபற்றி விவாதிக்க வேண்டுமென்று துடித்தார். இடையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்கள் அவரையும் மன்னனையும் சந்திக்க வைப்பதற்கு ஏற்றனவாக இல்லை. ஆயினும் உருத்திரங்கண்ணனாரின் உள்ளத்தில் தளர்ச்சி ஏற்பட வில்லை. எவ்வாறேனும் மன்னனைக் கண்டு தமிழுக்காக வாழ்பவரின் பக்கம் நின்று வாதிட வேண்டுமெனத் துணிந்துவிட்டார்.