உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

401


ரோமாபுரிப் பாண்டியன் 401 ருந்து மன்னனைக் காப்பாற்றும் பொறுப்பும் பெருமையும் தனக்குக் கிடைத் திருக்கின்றன என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டது. தன் சகோதரியின் சாவுக்குப் பிறகு, அவன் உள்ளத்தில் ஒரு சிறு மாறுதலுக்கான அசைவும் ஏற்பட்டிருந்தது. அவள் கல்லறையான பிறகு அந்த மாறுதல் சற்று வளரவும் தொடங்கியது. அக்காள் உயிரோடிருக்கும் வரையில் அவன் மனத்தில் தோன்றாத சொந்த பந்தமெல்லாம் அவள் பிணமான பிறகு அவனுக்குத் தோன்றியது. அவள் உயிரோடிருந்த நாட்களில் கொடிய உள்ளமும் பழி வாங்கும் வெறித் தன்மையும் கொண்ட ஒரு கணவனைத் திருத்தாமல் அவனோடு சேர்ந்து அநீதிக்கு வாழ்த்துப் பாடுகிறாள் என்று செழியன் வெறுப்படைந்திருந்தான். ஆனால் அவள் உயிர் பிரிந்ததும், அவன் இதயத்தில் இடம் பெற்றிருந்த வெறுப்பு உணர்ச்சி விலகிவிட்டது. அக்காளின் தியாகச் செயல் அவனை உருக்கிவிட்டது. அவள் எந்த ஒரு கடமைக்காக இறுதி வரையிலும் பணிபுரிந்து வீழ்ந் தாளோ அக்கடமையினால் பயன் பெற வேண்டிய இருங்கோவேள் மீதிருந்த ஆத்திரத்தின் சூடு தணிந்து அவன் மீது அனுதாப உணர்ச்சி தலை நீட்டியது. 'என்ன இருந்தாலும் அக்காளின் கணவன்!. அக்காளுக் குத்தான் நல்வாழ்வு கிடைக்கவில்லை; அவளது இலட்சிய மனிதன் இருங்கோவேளுக்காவது கோர முடிவு ஏற்படாமல் இருக்கட்டும்" என்று அவன் கருதினான். இருங்கோவேளின் நோக்கம் ஈடேறக்கூடாது. அதற்குத் தன்னைத் தவிர வேறு தடையே கிடையாது என்பதை அவன் தீவிரமாகச் சிந்தித்து முடிவு செய்திருந்தாலும், அந்த முடிவுக்கு எந்தப் பாதகமும் வராமல் இருங்கோவேளைத் திருத்துவதிலும் தன் பணிக்கு முக்கியத்துவம் ருக்கிறது என்று அவன் நினைத்தான். அதைத் தன் அக்காளுக்காகச் செய்ய வேண்டிய கடமையெனவும் கொண்டான். அதற்கான முதல் முயற்சியாகத்தான் ஓலையொன்றில் இருங்கோ வேளை எச்சரிக்கும் தோரணையில் அறிவுரையினைத் தீட்டி அவனிருப் பிடத்தில் வைத்து அவன் கண்ணில் படுமாறு செய்தான் செழியன். எதிர்பாராத வெற்றியை அந்த ஓலை தேடித்தந்தது. அந்த ஓலையில் அடங்கியிருந்த வாசகம் இருங்கோவேளை மிரட்டியது. யாரோ தன்னைச் சுற்றி வட்டமிடுகிறார்கள் என்ற பயம் சூழ்ந்து கொண்டது. அந்தப் பயத்தின் அடிப்படையில் முத்துநகையைப் பற்றிய எண்ணம் தலைதூக்கியது. இருங்கோவேளின் திட்டம் தலைகீழாக மாறியது. செழியனின் ஆசைப்படி இருங்கோவேள் மிக நல்லவனாக ஆகி விட்டான் என்று சொல்ல முடியாது. கரிகாலனைப் பழி வாங்க வேண்டு