ரோமாபுரிப் பாண்டியன்
409
ரோமாபுரிப் பாண்டியன் 409 மேல் அதனை உயர்த்திக்காட்டிட வேண்டும் என்ற தந்திரத்தை வகுத்துக் கொடுத்தவனும் அவனே. இருங்கோவேளை அவன் நிழல் போலத் தொடர்ந்து கொண்டே சென்றது அவனுக்குப் பல வழிகளிலும் பயனளித்தது. இல்லையென்றால் தன் கையே தன் கண்ணைக் குத்தின மாதிரி முத்துநகையின் கட்டாரிக்கு அல்லவா இந்நேரம் கரிகாலன் இரையாகியிருப்பான்? வேளிர் வீரனாகப் புகாருக்கு வந்து தன் அந்தரங்கங்களை ஓரளவுக்கு அறிந்து கொண்ட செழியனால்தான் சூழ்ச்சித் திறனுக்கு அழிவு ஏற்பட்டது என்பதனை அறியாத இருங்கோவேள், தான் இனிமேல் தப்புவதற்கு வழி எதுவும் இல்லை என்கிற நிலையிலேயே, விரக்தி என்னும் மலையுச்சிக்குச் சென்று விலாப்புடைக்கச் சிரித்தான். வேளிர்குல வேந்தனாக வாழ்ந்தவன், அறவழியிலேயே தன் வீரத்தை யும் விவேகத்தையும் வெளிப்படுத்தித் தன் ஆட்சியை மீட்டுக் கொள்ளத் தவறிவிட்டான். அத்துடன் குள்ளநரி நடவடிக்கைகளி லெல்லாம் கூசாமல் ஈடுபட்டுத் தன் பெருமை அனைத்தும் துகிலுரியப் படும் நிலைமைக்கும் இலக்கானான். தன்னுடைய இழிந்த செயல்களே தன் மனச்சாட்சியை உறுத்த, அந்த உறுத்தலின் வெளிப்பாடாகவே அவன் விடாமல் சிரித்தான்! அவன் சிரிக்கச் சிரிக்க, முத்துநகைக்கோ, சினத் தீ கொழுந்து விட்டெரிந்தது. 'இவனை உடனே சிறைபிடிப்பதை விட்டுவிட்டு ஏன் எல்லாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்?' என்று ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு. சிரித்துக்கொண்டிருந்த இருங்கோவேளின் கரம் அவனுடைய மார்பை மூடியிருந்த அங்கியினுள் நுழைந்தது; பளபளக்கும் கட்டாரியொன்றினை, அது மெள்ள மெள்ள வெளியே எடுத்தவண்ணம் இருந்தது. தீவட்டியின் மங்கிய வெளிச்சத்தில் முத்துநகை அதனைக் கவனித்து விட்டாள். அவ்வளவுதான். தன் கையிலிருந்த கட்டாரியை ஓங்கி வீசினாள். "அய்யோ முத்துநகை!" என்று அலறியவாறே தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சாய்ந்தான் இருங்கோவேள். கட்டாரி அவனது மார்பை ஆழமாக ஊடுருவி இதயப்பகுதியில் ஆழமாகப் பதிந்து கொண்டுவிட்டது. திடீரென்று இப்படியொரு துணிச்சலான செயலில் முத்துநகை இறங்கிவிடுவாள் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. எல்லாருமே