உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

கலைஞர் மு. கருணாநிதி


420 கலைஞர் மு. கருணாநிதி அதன் பின்னர்தானே, தங்களுக்கு நான் இழைத்துவிட்ட பிழையினை உணர்ந்து வருந்திச் சிறையினின்று தங்களை விடுதலை செய்யுமாறு உடனே ஆணை பிறப்பித்தேன்!” "அந்தப் பாடலில் வேந்தர் குலத்தில் பிறந்த காளையொருவனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா?" ஆமாம்... “அந்தக் காளை யாராக இருக்கும் என்று தாங்கள் எப்பொழுதாவது தங்கள் கற்பனையைப் படர விட்டதுண்டா?" அவற்றுக்கெல்லாம் எனக்கு நேரம் ஏது புலவரே? ஆனால் ஒரு வேளை செழியனாக இருக்கக் கூடுமோ என்று முதலில் நான் எண்ணிய துண்டு. அடுத்த கணமே 'அவன் சாதாரண மறவன்தானே! மன்னர் குலத்தில் பிறந்தவனாகத் தெரியவில்லையே! ஆகவே அவனாக இருக்க மாட்டான்'- என்ற எண்ணமும் எனக்கு உண்டாயிற்று.' "நான் குறிப்பிட்டிருந்த அந்தக் காளை இந்த இளைஞர்தான்!” "அப்படியா? வியப்பாக இருக்கிறதே! ஆமாம். இவர் எந்த நாட்டின் இளவரசர்?" "இவருடைய முகச்சாயலைக் கொண்டே இவர் எந்த நாடாக இருக்குமென்று கண்டுபிடிக்க முடியவில்லையா?" 1 "முகச்சாயலைப் பார்த்தால் சேர மன்னரின் மகனாகவும் இவர் தெரியவில்லை... பெருவழுதிப் பாண்டியரின் பிள்ளையாகவும் இவர் தோன்றவில்லை.." "அப்படியானால் தாங்கள் தோற்றுவிட்டீர்கள்?' என்று சிரிக்க லானார் காரிக்கண்ணனார். "தாங்கள் என்ன சொல்கிறீர்கள்!" "இவர் வேறு யாருமல்ல; நம்முடைய பெருவழுதி பாண்டியரின் பிள்ளையே தான் இவர்!" "அப்படியா?.... ஆனால் முகச்சாயல் பெருவழுதிப் பாண்டியரை அவ்வளவு ஒத்திருப்பதாகச் சொல்ல முடியவில்லையே!" "தந்தையின் சாயல்தான் தனயனுக்கு அமைய வேண்டும் என்பது என்ன நியதி? தாயின் சாயலையும் ஒத்திருக்கலாம் அல்லவா? "இருக்கலாம். இருக்கலாம். ஆமாம்! இவர் ஏன் நம்முடைய நட்புறவு விழாவின்போது தம் தந்தையுடன் வரவில்லை?"