428
கலைஞர் மு. கருணாநிதி
428 கலைஞர் மு. கருணாநிதி என்றாலும் தனக்கு ஏற்பட்டுவிட்ட நெஞ்சக் கொந்தளிப்பில், அவர் ஓய்வெடுக்கட்டுமே என்று விடுவதற்குக் கூட அவனுக்குப் பொறுமை இல்லை. காவலன் ஒருவனை அனுப்பி அவரை உடனே அழைத்து வருமாறு செய்து விட்டான். அவர் வந்து சேர்ந்ததும், அவருக்குரிய மரியாதையோடு வரவேற்று இருக்கையிலே அமரச் சொன்ன இளம்பெருவழுதி, "என்ன அறவாணர் அவர்களே! நம்முடைய கொற்கை மண்டலத்திலே ஒரு விந்தையான ஊடுருவல் நடந்திருக்கிறதே, தெரியுமா?" என்று கேட்டான். ஊடுருவலா? என்ன ஊடுருவல்? எனக்குத் தெரியவே தெரியாதே." என்று பதற்றத்துடன் பகர்ந்தார் அறவாணர். 41 அது படை ஊடுருவலாக இருந்தாலும் பரவாயில்லை. நம் கட்புலனுக்கு அது தெளிவாகத் தெரியும். நாமும் படைகளைத் திரட்டி நேருக்கு நேர் பொருதலாம். புறமுதுகிட்டு ஓடச் செய்யலாம். அல்லது நாமே விழுப்புண்பட்டு வெஞ்சமர்க் களத்திலேயே வீழ்ந்து மடியலாம். ஆனால் இந்த ஊடுருவல் வேறு வகையானது." அது என்ன ஊடுருவல், இளவரசே? சற்று விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்." "இது மொழி ஊடுருவல்!' அப்படியா? அது நிரம்ப நிரம்பப் பொல்லாததாயிற்றே! முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதாயிற்றே! கொஞ்சம் வளரவிட் டாலும் நாட்டின் எல்லாத் துறைகளிலுமே அது நஞ்சினைக் கலந்து விடுமே! நாளாவட்டத்தில் நம் செந்தமிழையே சிதறிடச் செய்திடுமே! நம் வருங்கால வழித்தோன்றல்களையும் வழிமாற வைத்திடுமே!' அறவாணர் இவ்வாறு உணர்ச்சிப் பெருக்கோடு உரைத்திடவும், இளம்பெருவழுதி ஒரு வறட்டுச் சிரிப்பினை உதிர்த்தான். "அறவாணர் அவர்களே! இந்த தள்ளாத பருவத்திலும் தங்களுக்குள்ள தணியாத தாய்மொழிப் பற்றுக்கு நான் உளமாரத் தலை வணங்குகிறேன். ஆனால், தங்களிடம் பொங்கிப் பெருக்கெடுக்கும் இந்தத் தாய்மொழிப்பற்று தன்மான உணர்வு - இந்தமண்ணிலே பிறந் திட்ட எல்லாருக்குமே இருந்திடக் கூடாதா? அதனை எண்ணிடும் போதுதான் என்னால் கலங்காமல் இருக்க முடியவில்லை. அறவாணரே. கலங்காமல் இருக்க முடியவில்லை!" "நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இளவரசே? அயல் மொழிகளின் ஆதிக்கம் வருவதற்கு நடைபாவாடை விரித்துவிடும் நச்சுச் செயலும் இந்த நாட்டில் முளைவிட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா!"