உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

கலைஞர் மு. கருணாநிதி


440 கலைஞர் மு. கருணாநிதி முடியலாம்; தங்கள்மீது மற்றவர்களுக்கு ஐயப்பாடுகளும் வரலாம்; ஏன் சில அரசியல் சிக்கல்களேகூட எழலாம். எதற்கு வீணான வம்பு?" "நீ என்ன சொல்கிறாய்?" ஆம், இளவரசே; நடக்கக் கூடியதைத்தான் சொல்கிறேன். என்ன இருந்தாலும் தாங்கள் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்களே. அதற்கு நன்றியறிதல் காட்டிடவாவது, நான் என்னைப் பற்றிய சில உண்மைகளை இப்போதே தங்களிடம் சொல்லிடத்தான் வேண்டும். தாங்கள் நினைப்பதுபோல நான் எளிய குடியில் பிறந்தவள் அல்லள். ஓர் அரசர் குடியினைச் சார்ந்தவளே!" , "அப்படியா? நீ எந்த நாட்டு இளவரசி?" "என்னுடைய நாடு எது என்று தெரிந்தால் தங்களால் சினத்தைக் கட்டுப்படுத்திட முடியாதோ என நான் அஞ்சுகிறேன்.' "அந்த அச்சம் உனக்குத் தேவையே இல்லை. அதுவும் உன்னைப் பொறுத்தவரையில் என்னிடம் சினமாவது எழுவதாவது?" "நான் வேளிர்குடியில் பிறந்தவள். என் பெயர் தாமரை. சிற்றரசர் இருங்கோவேள் என் உடன்பிறந்த அண்ணன். சோழப் பேரரசர் கரிகாலரி டம் தோற்ற பிறகு தலைமறைவாக மரமாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் நான் எப்படி வெளிப்படையாகத் தங்கள் அரண்மனையின் விருந்தாளியாக வரமுடியும்? ஏனெனில், தங்கள் தந்தையார் பெருவழுதிப்பாண்டியரும், கரிகால் மன்னரும் நட்புறவை வளர்த்துக் கொண்டு வரும் நல்ல நேரம் இது. கரிகாலரின் பகைவராகி விட்டவரின் தங்கையைத் தாங்கள் பாராட்டுகிறீர்கள் என்றால், தங்கள் மீது தங்கள் தந்தையாருக்கே சீற்றம் உண்டாகாதா? அத்துடன் கரிகாலருக்கே தங்கள் தந்தையார்மீது ஐயப்பாடு எழக்கூடும் அல்லவா? அதைத் தொடர்ந்து புதிய அரசியல் சிக்கல்கள் தோன்றுவதற்கு இடம் ஏற்படும் அல்லவா? அப்படியானால் நான் ஏன் இப்போது கொற்கைப் பட்டினம் வந்தேன் என்று தாங்கள் எண்ணக்கூடும். ஏதேனும் ஒற்று வேலையை மேற்கொண்டுதான் வந்திருப்பேனோ என்கிற ஐயப்பாடு தங்களுக்கு எழலாம். ஆனால்... தாங்கள் நம்பினாலும் சரி. நம்பாவிட்டா லும் சரி; என் மனச்சான்றின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்; நான் எளிய குடிமகளாகக் கொற்கைப்பட்டினத்திற்கு வந்ததே முத்துக்குளிப்பு விழாவினைக் கண்டிடும் ஒரே ஆசையினால் தான். "வியப்பாக இருக்கிறதே! இந்த விழாவுக்காகவா இத்தனை தூரம், அதுவும் தன்னந்தனியாக வந்திட்டாய்?" 'ஆம், இளவரசே! தங்களால் நம்பக்கூட முடியாது தான். ஆனால், இதற்குக் காரணம் ஒருவகையில் என் அண்ணியார்தான். அவரும்