442
கலைஞர் மு. கருணாநிதி
442 கலைஞர் மு. கருணாநிதி கிறக்கமே விளைந்துவிட்டது. எனினும், தன் மனத்தினை அவன் மிகவும் கடினத்துடனேயே கட்டுப்படுத்திக் கொண்டான். முன்போல. இப்போது மழையின் இரைச்சல் இல்லை. ஓய்ந்து விட்டது. காற்றின் சீற்றமும் இல்லை; அடங்கிப் போயிற்று. ஆயினும் கிழக்கே சிறிது தொலைவில், எம்பிக் குதித்து ஆர்ப்பரித்தன கடல் அலைகள், அவற்றை வம்புக்கு இழுப்பதுபோல் எழுந்து நிமிர்ந்து சுருண்டு விழுந்தன அவனுடைய நினைவின் அலைகள். சட்டென்று இளம்பெருவழுதியின் சிந்தனை வானிலே ஓர் எண்ணக்கீற்று மின்னல் வீச்சு! தொண்டையைக் கனைத்தவாறே "சரி, தாமரை! நீ கூறியவற்றையும் ஆராய்ந்திட வேண்டியதுதான். என்னால் உன் அண்ணனின் சீற்றத்துக்கு நீ ஆளாவதை இப்போதைக்கு நான் விரும்பிடவில்லை. ஆனாலும் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்" என்றான் அவன். என்ன முடிவு? உன் அண்ணனை நானே வந்து எப்படியாவது சந்தித்துச் சில தலையாய் செயல்களைப் பற்றி முறையாகவே விவாதித்திட விரும்புகிறேன். 'இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அவ்வாறு தாங்கள் சந்தித்து உரையாடுவது சரியாக இருக்குமா? நான் முன்னே சொன்னதைப்போன்று, தங்கள் தந்தையாரும் கரிகாலரும் தங்களுடைய செயலை அறிந்தால் வெகுள மாட்டார்களா?" "ஒரு காலத்தில் பகைவர்களாக விலகிட நேர்ந்தவர்கள் எந்தக் காலத்திலும் நண்பர்களாக இணையவே கூடாது என்று ஏதேனும் இலக்கண வரம்பு இருக்கிறதா? மேலும், பாண்டிய நாட்டவருக்குப் பகையாளிகளா வேளிர்குடியினர்? இல்லையே! அந்தநாள் முதற்கொண்டு 'கொள்வினை கொடுப்பினை' - உறவு முறையும் இந்த இரண்டு மரபினர்க்கிடையேயும் இருந்துதானே வந்திருக்கிறது! நான் சிறுவனாக இருந்தபொழுது என் தந்தையார் அடிக்கடி வெண்ணிப் போர்' பற்றி விரிவாகப் பேசியதெல்லாம் இன்னும் என் நெஞ்சிலே பசுமையாகப் பதிந்துள்ளது. அந்தப் போரில் வேளிர்க்குடியினருக்கு ஆதரவாகத்தானே பாண்டியநாட்டுப் படைகள் கரிகாலரை எதிர்த்துக் களத்திலே குதித்தன! எனவே, உன் அண்ணனைச் சந்தித்து நம்முடைய பழைய உறவினைப் புதுப்பித்துக் கொள்ள முனைவதில் எந்தவிதத் தவறும் இருப்பதாக எனக்குப் படவில்லை. அத்துடன், நான் கேள்வியுற்ற அளவில், சோழப் பேரரசர் பகைவர்க்கும் அருள் புரியும் பண்பாளரா கவே எனக்குத் தோன்றுகிறார். பிஞ்சுப் பருவத்திலேயே அவரைத்