ரோமாபுரிப் பாண்டியன்
471
ரோமாபுரிப் பாண்டியன் 471 விண்ணளாவி நின்றிடும் அழகான மாளிகைகள், அவற்றின் சாளரங்களைத் தழுவி முத்தமிடும் பூங்கொடிகள் இன்னோரன்ன காட்சிகளெல்லாம் முத்து நகையின் உள்ளத்திலே உவகைத் தேனைச் சொரிந்தன. தேர் இப்பொழுது அங்காடிகளின் பக்கமாகத் திரும்பிற்று. பூம்புகாரிலுள்ள நாளங்காடி - அல்லங்காடிகள் எவ்வாறு தோற்றமளிக் குமோ அவ்வாறே மதுரை அங்காடிகளும் பொலிவோடு விளங்கின. ஆங்காங்கே கண்ணைக் கவரும் வண்ணக்கொடிகள் காற்றிலே அசைந்தாடி, இன்ன இடத்தில் இன்னபொருள் விற்கிறது என்பதனைக் குறிப்பால் உணர்த்திய வண்ணம் இருந்தன. அவை மட்டுமின்றிக் கோவில்கள் விழாக்களைப் புலப்படுத்திடும் கொடிகள்; போர்க்களத் திலே பெற்ற வெற்றியினை அறிவித்திடும் கொடிகள், அறிஞர்களால் ஏற்றி வைக்கப்பெற்ற கல்விக் கொடிகள், கொடை-தவம் ஆகியவற்றை உணர்த்திடும் தியாகக் கொடிகள் முதலியவையும் அருவிகள் போல் அசைந்தாடின. ஒரு திருப்பத்திலே பறந்து கொண்டிருந்த கொடி, 'களிப்பளிக்கும் கள் விற்கும் அங்காடி இங்கேதான் இருக்கிறது' என்று கூறாமல் கூறியது. அந்தக் கள் அங்காடியைக் கடந்து தேர் நகர்ந்திட்ட பொழுது. தெருவோரமாக இரு திண்டோள் மறவர்கள் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தனர். பனம்பழம் போலக் கறுத்த மேனியினையுடைய அவர்களது கண்களோ நெருப்புத் துண்டுகளாகச் சிவப்பேறியிருந்தன. நட்டுவா க்கலி போல் நறுக்கி முறுக்கி விடப்பட்ட தங்கள் மீசையைத் தடவிய வாறே அவர்கள் ஏதேதோ உளறிச் சென்றனர். உனக்குச் சேதி தெரியுமா? ரோமாபுரியிலிருந்து தூதுவர் வந்திருக்கிறாரே, அவருக்குப் பதிலாக நம் பாண்டிய நாட்டின் தூது வராகத் தளபதி நெடுமாறன்தான் செல்லப்போகிறாராம்!' அப்படியா! இளவரசர் இளம்பெருவழுதி போகக் என்றல்லவா நான் கேள்விப்பட்டேன்?" "அவரைத்தான் கொற்கையில் காணோமாமே?" கூடும் "வேடிக்கையாக இருக்கிறதே! எங்கே போயிருப்பார் இளவரசர்?' "யார் கண்டார்கள்? அவருக்குக் கடலிலே பயணம் போவதென்றால் கரை கடந்த மகிழ்ச்சி, ஒரு வேளை, எங்காவது கரை சேர்ந்திட மனமே இல்லாமல், கடலிலேயே விளையாடிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?"