உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

கலைஞர் மு. கருணாநிதி


478 கலைஞர் மு. கருணாநிதி ஆனால் அவன் வாயைத் திறந்திடுமுன் ஒரு நெடிய உருவம் அந்தக் த்தினுள் நுழைந்தது. அந்த நெடிய உருவம் வேறு யாரும் அல்ல; ஒரு சமணத் துறவியே ஆவார்! வெள்ளை வெளேர் என்று விழிகளைப் பறித்திடும் வகையினில், தும்பைப் பூவினும் துல்லியமான வெண்துகில் உடுத்தியிருந்தார் அவர். அவர் தம் பரந்த முகத்தினிலோ சரஞ்சரமாக அரும்பு கட்டியிருந்தன வேர்வை முத்துக்கள். அத்துடன், புலியைக் கண்டு மிரண்டோடி வந்திட்ட முயலைப் போல அவரது உடல் தடதடவென்று ஆடிற்று; மேல் மூச்சு - கீழ் மூச்சு வேறு வாங்கிற்று. பெருவழுதிப் பாண்டியனை நோக்கிக் கரங்கூப்பித் தொழுதிட்ட அவர், “பாண்டிய வேந்தே! தங்கள் நாட்டிலே இனி நாங்கள் நடமாடவே முடியாதுபோல் இருக்கிறதே! பெளத்த சமயத்தினர் எங்களைப் பழிப்பது போதாது என்று பலி வாங்கவும் தலைப்பட்டு விட்டனர். எங்கள் ஊர்வலங்களுக்கு ஊறு செய்கின்றனர்; எங்கள் சமணக் கோவிலுக்கருகி லேயே தங்கள் சங்கத்தினைக் கூட்டி, எங்கள் தத்துவங்களையெல்லாம் சாடுகின்றனர்; எங்கள் தீர்த்தங்கரர்களையும் திட்டித் தீர்க்கின்றனர். எங்கள் எருதுக் கொடியினையும் இழித்துப் பேசுகின்றனர். ஏனென்று கேட்டால் எதிர்த்து அடிக்கவும் வருகின்றனர். தாங்கள் உடனே தலை யிட்டு அவர்களுடைய தகாத போக்கினையெல்லாம் தடுத்திடமாட்டீர் களா? அவர்களுடைய அடாத செயல்களையெல்லாம் இப்போதே அறவே களைந்திடாவிட்டால் நாங்கள் அமைதியான முறையில் வாழவே முடியாது. அரசே! வாழவே முடியாது! பிறகு, நாங்கள் அத்தனை சமணர்களும் 'சல்லேகனை' புரிந்து சாவதைத் தவிர வேறு வழியே இல்லை! என்று படபடப்புடன் பொரிந்து தள்ளினார். "ஆமாம்; தாங்கள் இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று மென்குரலில் கேட்டான் பெருவழுதி.. "பசு மலையிலிருந்துதான், அரசே!" "பசுமலைதானா? அங்கே பௌத்தர்கள் குறைவுதானே! சமணர்கள் தாமே மிகுதி!" "ஆட்டு மந்தை எத்துணை பெரிதாக இருந்திட்டால்தான் என்ன? ஒரேயொரு ஓநாய்க்கு ஈடு கொடுத்திட இயலுமா? தாக்கப்பட்ட காரணத்தால்தான் துறவியின் வாயிலிருந்து தப்பான வார்த்தைகள் வருகின்றன என்று எண்ணியோ என்னவோ, பாண்டிய