480
கலைஞர் மு. கருணாநிதி
480 கலைஞர் மு. கருணாநிதி முடியும்? எனவே, அவர்கள் கூட்டத்தில் புகுந்து சில வினாக்களை எழுப்பினோம். அதற்காக என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் அடித்து நொறுக்கி விட்டார்கள். அத்துடன் கனகநந்தி அவர்களே நேரில் வந்து, தங்களிடம் வருத்தம் தெரிவித்திட வேண்டும் என்று வற்புறுத்திச் சமணக் கோவிலையே முற்றுகையிட்டு நிற்கிறார்கள். எங்கே அவரைக் கொன்று விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே இப்போது தங்களிடம் ஓடோடி வந்தேன்." "நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அங்கே நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் போல் தோன்றுகிறதே!' ஆம் வேந்தே! பசுமலை முழுவதுமே ஒரே கொந்தளிப்பாக இருக்கிறது! துறவியார் இவ்வாறு சொல்லிடவும் செழியன் குறுக்கிட்டான்; - "மன்னவா, நான் ஒன்றைச் சொல்லலாமா?" 14 'ஓ! தாராளமாகச் சொல்லலாமே." "இவர் கூறுவதைப் பார்த்தால் இது சாதாரணச் சிக்கலாகத் தோன்ற வில்லை. இரு சமயங்களுக்கும் இடையே இத்துணை கடுமையாகப் பகைமை நிலவுவதற்கு வேறு சில அடிப்படைக் காரணங்களும் இருந்திடல் வேண்டும். எனவே எடுத்த எடுப்பிலேயே அரசர் அளவிலே இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முற்படுவது முறையில்லை என்பதே என் பணிவான கருத்து. முதலில் இவரோ இவரைச் சார்ந்தவர்களோ நம் அறங்கூறு அவையத்திடம் முறையிட்டுக் கொள்ளட்டும். அதற்கு முன்னர் இப்பொழுது உடனடியாக நம் படை வீரர்களை அனுப்பிப் பசுமலை எரிமலை ஆகிவிடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்!" ஆம், செழியா! நீ மொழிவதுதான் முற்றிலும் சரி. தளபதி நெடுமாறனை அனுப்பி வைப்போமா?" என்று சிந்தித்த மன்னன், “ஏன் செழியா! நீயேதான் சில படை வீரர்களை அழைத்துக் கொண்டு பசுமலை நிலைமையை ஒழுங்கு படுத்திவிட்டு வாயேன்!" என்றான். 4 "தங்கள் ஆணை எதுவாயினும் நிறைவேற்றிட நான் என்றுமே காத்திருக்கிறேன் அரசே! என்ற அவன், நொடிப்பொழுதினைக்கூட வீணடித்திடாமல் பெருவழுதியிடம் மட்டுமின்றிக் காரிக்கண்ணனார், முத்துநகை இருவரிடமும்கூட விடை பெற்றுக்கொண்டு வெளியேறினான். "நன்றி மன்னவா; மிக மிக நன்றி; இவ்வளவு விரைவினில் இத்துணைச் சுறுசுறுப்புடன் தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நான் நம்பிடவே இல்லை. எங்கள் அறக்கடவுளான அருகதேவரின் அருளாலே தாங்கள் நெடுங்காலம் வாழ்ந்திட வேண்டும். செழியன் உரைத்திட்டவாறே அறங்கூறு அவையத்திடம் முதலில் எங்கள்