ரோமாபுரிப் பாண்டியன்
485
ரோமாபுரிப் பாண்டியன் 485 சமணத் துறவி இவ்வாறு வாதிடும்பொழுதே. எதிர்வழக்காடிட வந்திருந்த புத்தபிக்கு எழுந்து குறுக்கிட்டார். "மேன்மை தங்கிய அறங்கூறும் அறிஞர்களே! எனது மதிப்பினுக் குரிய நண்பர் சமணத் துறவியார், தங்கள் வழக்கினை எடுத்துரைக்க வந்தாரா அல்லது தங்கள் சமயத்தின் வரலாற்றைப் பரப்பிட வந்தாரா என்று விளங்கிடவில்லை. தொடர்பில்லாத செய்திகளையெல்லாம் அவர் சுற்றி வளைத்துப் பேசிக் காலத்தை வீணடிக்க வேண்டாமெனக் கட்டளை இடுமாறு பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்." உடனே அவையத் தலைவர், “புத்த பிக்குவின் மறுப்பு முறையானதே! இனி சமணத் துறவி வழக்கினுக்குத் தொடர்பில்லாதவற்றைச் சொல்வத னைத் தவிர்த்திடல் வேண்டும்" என்றார். அந்த ஆணைக்குப் பணிந்த சமணத் துறவி தொடர்ந்திட்டார். ...பசுமலை நிகழ்ச்சி மட்டும்தான் பௌத்தர்கள் எங்களைத் தாக்க முனைந்திட்ட முதற்களம் என்பதில்லை. இதற்கு முன் பலமுறை எங்களை அவர்கள் தாக்கியிருக்கிறார்கள். தரக்குறைவாகப் பழித்தும் இருக்கிறார் கள். நாங்கள் கார்த்திகை முதலான மாதங்களில்; அட்டமி முதல் பௌர்ணமி வரையுள்ள நாட்களில், தெய்வப் பொம்மைகளை வைத்துத் தேர் ஊர்வலம் நடந்திடுவது எங்கள் சமண வழிபாட்டு முறைகளிலே ஒன்று. அதனை ஏன் இந்த பௌத்தர்கள் பழித்திட வேண்டும்? எங்கள் முதல் தீர்த்தங்கரரின் சின்னம் எருது ஆகும். அதனைக் கொடிகளில் பொறித்து நாங்கள் ஏந்திச் சென்றால் இவர்களுக்கு என்ன வந்தது? எங்கள் மனம் புண்படும் வண்ணம் ஏன் பேசிட வேண்டும்? இவ்வாறு ஒரு சமயத்தினர் இன்னொரு சமயத்தினரின் மனத்தைப் புண்படுத்த லாமா? பௌத்தர்கள் மட்டும் தங்கள் புத்தரை வழிபட்டிட வில்லையா?' அவையத் தலைவர் மெல்ல முறுவலித்தார்:- "மனம் புண்படுகிறது, மனம் புண்படுகிறது என்றெல்லாம் கூறுவது இருக்கிறதே அது ஒரு விந்தையான வறட்டு வாதம். பண்படுகிற மனம் புண்படாது; புண்படுகிற மனம் பண்படாது. தங்களுடைய கருத்துக்கு இன்னொருவர் மாற்றுக் கருத்தினைக் கூறிடுவதா என்னும் மமதை எண்ணங் கொண்டோர்தாம் இங்ஙனம், 'மனம் புண்படுகிறது; மனம் புண்படுகிறது' என்றெல்லாம் புலம்பிடுவார்கள். கருத்தைக் கருத்தினால் மோதுங்களேன்! இலட்சியத்தை இலட்சியத்தால் வெல்லுங்களேன்! அதனை விடுத்து உங்கள் சமயங்களில்... - தத்துவங்களில் - சாத்திரங் களில் சடங்குகளில் உள்ள குறைபாடுகளை மற்றவர்கள் சுட்டிக் காட்டவே கூடாது என்று உங்களுடைய சிந்தனை வளத்திற்கு நீங்களே ஏன் சிறையிட்டுக் கொள்கிறீர்கள்? 'இந்தச் சமணர்கள் இன்னும் -