உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

கலைஞர் மு. கருணாநிதி


488 கலைஞர் மு. கருணாநிதி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தித் துப்புரவாக்கட்டும். அதற்குப் பிறகு எங்களைப் பற்றி இழிவாகப் பேசட்டும்..." புத்த பிக்கு இவ்வாறு இயம்பிடும் பொழுதே அந்தச் சமணத் துறவி இடையிலே குறுக்கிட்டார். "எங்கள் சமணக் கோவில்கள் என்றைக்குமே தூய்மையானவைதாம். ஆனால் அவர்களுடைய புத்த விகாரங்களிலேதான் குப்பைகள் மலைமலையாகக் குவிந்து கிடக்கின்றன' என்று அனலினைக் கக்கினார் அவர். - "அறங்கூறு அவையப் பெரியோர்களே! சமணத்துறவி அவர்களின் ஆத்திரத்தைக் கண்டு என்னால் வருந்திடாமல் இருக்க முடியவில்லை. முதலில் புத்த பிக்குகளாகிய நாங்கள் உறைகின்ற இடத்தின் பெயரை யாவது அவர் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? அவருக்கு எப்பொழுதுமே வடபுலத்தில் இடம் பிடிப்பதிலேயே குறி போலும்! அதனால் தான் அங்கே உள்ள புத்த விகாரங்களை நினைவில் வைத்திருக் கிறார். ஆனால், தென்புலத்திலே, அதாவது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தமிழகம் முதலான பகுதிகளிலே, புத்த பிக்குகள் ஒரு குழுவாக சங்கமாக உறைகின்ற இடம் பௌத்தக் 'குகை' என்றுதான் அழைக்கப் படுகிறதேயன்றி புத்த 'விகார்' என்று அல்ல. புத்த 'விகார்' இருப்பதெல் லாம் வடபுலத்திலேதான்! அது போகட்டும்; இந்த வழக்கினை பொறுத்தமட்டில் சமணத் துறவியார் சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று கருதுகிறேன். முதலாவது குற்றச்சாட்டு சமண சமயத்தினரின் வழிபாட்டினைக் கேலி புரிந்து அவர்கள் மனத்தினைப் புண்படுத்துகிறோம் என்பது; இரண்டாவது குற்றச்சாட்டு, அவர்களுடைய சமயத்தலைவர் கனகநந்தி அவர்கள்மீது வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கிறோம் என்பது; எங்கள் பௌத்த சங்கக் கூட்டம் ஒன்றிலே தங்கள் ஐயப்பாடுகளைத் தெளிவுபடுத்திக் கொள்ள வந்த சில சமண நண்பர்களை நாங்கள் நையப்புடைத்தோம் என்பது, மூன்றாவது. "முதலாவது குற்றச்சாட்டினைப் பொறுத்தமட்டில் சமண சமயத்தினர் அண்மைக் காலமாகக் கையாண்டு வருகின்ற வழிபாட்டு முறைகளிலும், ஊர்வலக் காட்சிகளிலும் உண்மையிலேயே எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. அதனை மழுப்பிடவோ மறுத்திடவோ நான் விரும்ப வில்லை. சமயத்துறையிலே குழந்தைப் பருவத்தில் அரிச்சுவடிப் பயிற்சி பெறுவோர்க்கு வேண்டுமானால் பொம்மை வணக்கம் உருவ வழி பாடு - தேவையாக இருக்கலாம். அறிவில் முதிர்ந்திட வேண்டிய பெரிய வர்களும் அந்தத் தொடக்க முறைகளிலேயே தங்களுடைய சிந்தனை வளர்ச்சியை முடக்கிக் கொள்வானேன்? சின்னஞ் சிறுவர்களுக்கு விளக்கிடுவதற்காக, 'இதோ பார், இதுதான் மரம் என்பது; இதோ பார். -