உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

கலைஞர் மு. கருணாநிதி


500 கலைஞர் மு. கருணாநிதி கடந்த சில நாட்களாகத் தன்னுடைய காதற் கிள்ளையை எவ்வா றேனும் கண்டிடமாட்டோமா என்கிற மாளாத வேட்கை வெறியினால் அவன் பட்டிருக்கும் பாடுகள் எண்ணிலும் அடங்கா; ஏட்டிலும் அடங்கமாட்டா. கரிகாலனிடமும் காரிக்கண்ணனாரிடமும் அந்தப் பாழ் மண்டபத்தில் விடைபெற்றுக் கொண்டு தாமரையை அழைத்து வருவதற்காகப் பூம்புகார் அரண்மனையை அடைந்தவனை அதிர்ச்சி தரும் செய்தியொன்றே வரவேற்றது. பரபரப்புடன் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த காவலர்களில் ஒருவன்தான் தாமரை தப்பிவிட்ட அந்தச் செய்தியினைக் கூறி அவனை அதிர்ச்சிக்கு ஆளாக்கியவன். அதன் பின்னர் சில தவறான தகவல்களை நம்பி, அவளைத் தேடிடும் முயற்சியில் தன் புரவியினைத் தட்டிவிட்ட அவன், அலைந்திட்ட அலைச்சல் - கிடந்திட்ட பட்டினி - அடைந்திட்டமயக்கம் - தவித்திட்ட தவிப்பு - ஏராளம், ஏராளம்! அதனாலேயே அவன் குறித்த நேரத்தில் கொற்கைப் பட்டினத்திற்குத் திரும்பிவர முடியாமலும், பிணியுற்ற தன் தந்தையைக் கண்டிட உடனே மதுரை மாநகர்க்கு வந்திட முடியாமலும், தான் கெட்ட பெயரினைச் சுமந்திட வேண்டிய நிலைமையும் அவனுக்கு நேர்ந்திட்டது. இந்த 'தேடு படலம்' இன்னும் நீடிக்கிறதே என்று நினைத்திட்ட அளவில் அவனது நெஞ்சிலே வலி எடுத்திடாமல் இல்லை. கனகநந்தி முனிவராவது தனக்குக் கை கொடுத்திட மாட்டாரா என்னும் அவனது கனவும் பலித்திடவில்லை. தான் அடைக்கலம் அளித்திட்ட அணங்கின் பெயர் என்ன என்பதையாவது அந்த மனிதர் அறிந்து வைத்திருக்கக் கூடாதா? மதுரை வந்திட்ட பின்னரும் தாமரைக்காக அலைந்திட்ட அலைச்ச லில் உடல்கூடச் சற்று இளைத்துவிட்டது இளம்பெருவழுதிக்கு; மனச்சோர்வுக்கோ எல்லையே இல்லை. இந்நிலையில் - ஒருநாள், உழைத்துக் களைத்துவிட்ட கதிரவன் ஓய்வெடுக்கச் சென்று கொண்டிருக்கும் மாலை வேளை. வைகையாற்றங்கரையை அடுத்திட்ட வளங்கொழித்திடும் சோலை யொன்றில், தன்னந்தனியாக உலவிட வந்த இளம்பெருவழுதி ஒரு மருத மரத்தின் வேரினில் தலையைச் சாய்த்த வண்ணம் படுத்திருந்தான். அவ னுடைய வலக்கரத்தில் எழுத்தாணியும், இடக்கரத்தில் பன்னீர்ப்பூவின் நிறத்தில் சற்றே மஞ்சள் பூசப்பெற்ற பனை ஓலைகளும் இருந்தன. அவனுடைய எண்ணங்களோ கற்பனை வானிலே சிறகடித்துப் பறந்து திரிந்து - தாமரையின் எழில் வழியும் தளிருடல் மீதே மொய்த்து,