உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

கலைஞர் மு. கருணாநிதி


508 கலைஞர் மு. கருணாநிதி இப்போதோ ரோமாபுரிக்கே தூதுவனாகச் சென்றிட வேண்டிய பெரும் பொறுப்பு! இந்நிலையில் அவன் இனிமேல் தாமரையை எங்கே போய்த்தேடு வது? எங்ஙனம் அவளைச் சந்திப்பது? எப்போதுதான் அவள் இன்முகத் தினைக் கண்டு களிப்பது? தன் இதய மூட்டையில் சிறையிருக்கும் காதல் மணிகளைத் தான் இனி எந்தக் காலத்தில் அவிழ்த்து விடுவது? 'உன்னை ரோமாபுரிக்குத் தூதுவனாக அனுப்பி வைத்திட எண்ணி யுள்ளேன்,' என்று பாண்டிய மன்னன் பகர்ந்திட்ட அந்த நாள் முதல், நாவாயில் ஏறி ரோமாபுரிக்குப் பயணந் தொடங்கிடும் இந்த நாள்வரை மற்ற எல்லாவற்றையும்விடச் செழியனின் சிந்தனையை இறுக்கிப் பிசைந்திட்டது தாமரையை இனி, எப்போது, எங்ஙனம் சந்தித்திடப் போகிறோம் என்கிற ஏக்கமே ! அந்த ஏக்கத்தின் உறுத்தல் புலவர் காரிக்கண்ணனாரிடம் தாமரை யைப் பற்றி விவாதித்திடும் அளவுக்கும் செழியனைக் கொண்டுபோய் நிறுத்திற்று. "தங்களுடைய அறிவுரைப்படியே தளபதி நெடுமாறர் கூறுவது போன்ற அவதூறு மொழிகளைக் கூடத் தள்ளிவிட்டே நான் ரோமாபுரி செல்வதற்கு ஆயத்தமாகி விட்டேன். ஆனால் இன்னொரு நினைப்புத் தான் செவியினில் நுழைந்திட்ட சிற்றெறும்பு போல என் நெஞ்சினையே துளைக்கின்றது; நோயினைக் கொடுக்கின்றது" என்று இறங்கிய குரலில் இயம்பினான் செழியன். "எதைப் பற்றிய நினைப்பு, செழியா?' என்று பரிவுடன் வினவினார் காரிக்கண்ணனார். "தாமரையைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். அவள் காணாமற் போய்விட்ட புதிரை விடுவிக்காமல் போகின்றோமே என்பதுதான் என்னை மிகவும் வாட்டுகிறது." "அந்தக் கவலை உனக்கு ஏன் செழியா? கரிகாற் சோழரும், பெருவழுதிப் பாண்டியரும் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? அவர் களைவிட இளவரசர் இளம்பெருவழுதி அவளைக் கண்டு பிடித்திடாமல் விடவே மாட்டாரே! "அவருக்கு என்ன அவ்வளவு அக்கறை?” "நீ வினவுவது வேடிக்கையாக இருக்கிறதே? காணாமற்போன காதலியைக் கண்டுபிடித்திடும் துடிப்பும் அக்கறையும் காதலனுக்குத் தானே மிகுதியாக இருந்திட முடியும்?"