உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

கலைஞர் மு. கருணாநிதி


514 கலைஞர் மு. கருணாநிதி காலைநேரத்தில் 'சுள்' என்று வீசிடும் இளவெயிலில் அவனைத் தொற்றிக் கொண்டிருந்த குளிர் பறந்தோடிற்று. உடம்பிற்கும் உள்ளத் திற்கும் ஒரு தனியான சுறுசுறுப்பு உண்டாயிற்று. .. 'டைபர் நதி இத்துணை அகலமாக இருக்குமென்று நான் நினைத்திடவே இல்லை" என்றான் செழியன். 4+ 'அகலமானது மட்டுமல்ல; தத்துவப் பேரறிஞர்களின் சிந்தனையைப் போல் இந்த நதி ஆழமானதும் கூட!” என்றான் சிப்பியோ. "இதன் கரையிலேதான் ரோம் நகரம் அமைந்துள்ளது இல்லையா?" "ஆம், தூதுவர் அவர்களே!" "ஆற்றங்கரையிலே அமைந்திருக்கும் எந்த நகருமே ஒரு தனி அழகுதான்! ஆனால் பூம்புகாரைப் போலக் கடலை ஒட்டியே ரோமாபுரி இருந்திருந்தால் இன்னும் அதன் சிறப்பு மேலோங்கியிருக்கும் இல்லையா? "மாவீரன் ரோமுலசுக்கும் முதலில் அந்த எண்ணம் தான் ஏற்பட்ட தாம். ஆனால், இங்கே கடற்கொள்ளைக்காரர்களின் கொடுமையான நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சியே உள்நாட்டில் ரோம் நகரை அவனே நிறுவினானாம். இப்போதும் அதன் எழிலுக்கு ஒன்றும் குறைவு இல்லை. அதுவும் எங்கள் அகஸ்டஸ் மன்னர் அரியணை ஏறிய பின்னர் அவருடைய அற்புதமான வீடு கட்டும் திட்டங்களால், தலைநகருக்கு ஒரு தனிப்பொலிவே உண்டாகியுள்ளது.' 'ஆமாம், அகஸ்டஸ் மன்னர் ஜூலியஸ் சீசரின் நேரான வழித் தோன்றல் இல்லையாமே? அவருடைய உடன்பிறந்தவர் ஒருவரின் பேரப்பிள்ளைதானாமே! அப்படியானால் ஜூலியஸ் சீசரின் பெயரைச் சொல்லிட அவருக்கு என்று பிள்ளையே பிறந்திட வில்லையா?" “ஏன் பிறந்திடவில்லை? எகிப்து நாட்டில் எழிலரசி கிளியோபாத்ரா பெற்றெடுத்த சீசரியோன்' என்பவர் ஜூலியஸ் சீசரின் மகன்தானே! ஒரு காலத்தில் சீசர் மன்னர் தம்முடைய தலைநகரையே அலெக்சாண்டிரி யாவுக்கு மாற்றிக் கொள்ளப் போகிறார் என்றும், அங்கே ஆண்டிடும் கிளியோபாத்ராவை மணந்து கொண்டு தங்களுக்குப் பிறந்திட்ட சீசரியோனைத் தம்முடைய சட்டப்படியான - முறையான மகன் என்று அறிவித்திடப் போகிறார் என்று கூட வலுவான வதந்திகள் உலவினவாம். ஆனால், தம்முடைய பெருமைமிக்க 'ஹெலனி'யப் பரம்பரையில் உதித்திட்ட ஒருவரே தமக்குப் பின்னர் ரோமாபுரிப் பேரரசின் மாமன்ன ராக மகுடம் சூட்டிட வேண்டும் என்று விழைந்ததாலேயே, அவர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டாராம். அத்துடன் பிஞ்சுப் பருவத்தி