உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

517


ரோமாபுரிப் பாண்டியன் 517 பெருக்கிவிட வேண்டும் என்றெல்லாம் அவர் கொண்டிருக்கும் பேரார்வம் இருக்கிறதே, அது அளவிடற்கரியது, அழகான வீடுகளை எழுப்புவதிலும், ஆட்சித் துறையினைச் செப்பனிடுவதிலும் அவர் காட்டிடும் அக்கறையும் கொஞ்ச நஞ்சமல்ல. மொத்தத்தில் நாடு முழுவதும் வறுமை அகன்று, வளங்கள் நிறைந்து, புதுமை மணம் கமழ்ந்திடும் பொருட்டுப் புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டிய வண்ணமே உள்ளார் எங்கள் அகஸ்டஸ் மன்னர். பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தோடு தூதுவராகத் தொடர்புகளை அவர் மேற்கொள்ள முற்பட்டதே வேறு யாருக்குமே தோன்றிடாத புதுமையான ஏற்பாடல்லவா?" என்று பெருமிதத்தோடு கூறி மகிழ்ந்திட்டான் சிப்பியோ. மரக்கலம் ரோம் நகரினை நெருங்கிற்று. செழியனை வரவேற்றிட செனேட் உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மட்டுமின்றிப் பொதுமக்களும் வந்திருந்தனர். இவ்வளவு திரளாக ரோமானியர்கள் குழுமிநின்று தனக்கு உற்சாகமான வரவேற்பினை வழங்கிடுவர் என்று செழியன் எதிர்பார்த்திடவே இல்லை. நானிலம் போற்றிடும் நாகரிகத்தின் தொட்டிலாகத் தன் புகழ்ப் பதாகையின் பட்டொளி வீசிப் பறக்க விட்டுக் கொண்டிருக்கும் அந்த ரோமாபுரி மண்ணில் தன்னுடைய காலடிகளை வைத்ததுமே செழியனுடைய உடலும் உள்ளமும் புளகமுற்றுச் சிலிர்த்தன. அயல்நாடு ஒன்றிலே பல நூறு மனிதர்களின் பார்வைக்கு விருந்தாகப் பாராட்டிற்கு உரியவனாக - தன்னை உயர்த்திவிட்டு எங்கோ தொலை தூரத்திற்கு அப்பால் அமைதியாக அமர்ந்திருக்கும் பெருவழுதிப் பாண்டியனையே அப்போது தன் நெஞ்சினுள் நினைத்து நன்றியறித் லோடு வழிபாடு புரிந்து கொண்டான் செழியன். மரக்கலத்தைவிட்டு இறங்கித் தரையினில் அவன் அடி வைத்ததுமே அங்கே நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனுக்கு முதன் முதலில் வரவேற்பு மாலையைச் சூட்டிட வந்தது யார் தெரியுமா? ஓர் அழகுப் பதுமை! அவளுடைய நீல விழிகள் நெஞ்சின் அடிக்குருத்தையே வருடி விடுவதுபோல் வந்தன செழியனை நோக்கி.