உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

531


ரோமாபுரிப் பாண்டியன் 531 கொடுத்திடவில்லை; விரைவிலேயே அவர்கள் எல்லாருடைய எதிரிலும் நடுக்கூட்டத்தில் வந்து நின்றிட்டாள். ரோமாபுரி மண்ணிலே செழியன் அடிவைத்திட்ட பொழுது அகஸ்டஸ் பெருமகனாரின் சார்பில் ஆரத்தினைச் சூட்டி முதன் முதல் வரவேற்பினை வழங்கினாளே. அதே ஆரணங்குதான் அவள்! ஆம்! ஜுனோ! "நீதானா? ஆமாம், ஏன் இவ்வளவு நேரம்?" - என்று வினவினார் அகஸ்டஸ். "தூதுவர் தங்கப்போகும் இல்லத்தில் எல்லா வசதிகளும் இருக்கின்றனவா என்று கவனிக்கச் சென்றிருந்தேன்." “பரவாயில்லை, இப்படியெல்லாம் தனக்காக அக்கறை எடுத்துக் கொள்ளக்கூடிய ஒருத்தி இங்கே இருக்கக்கூடும் என்பது இந்தத் தூதுவருக்கும் முன்கூட்டியே தெரியும் போலும்! இல்லையென்றால் உனக்கும் சேர்த்து ஒரு பரிசினைக் கொண்டு வந்திருப்பாரா?" கேலியாக நகைத்திட்டார் அகஸ்டஸ். "எனக்காவது, பரிசாவது?" என்று எதிர்க் கேள்வியினை ஜூனோ எழுப்பிடும்பொழுதே, அவளும் அகஸ்டஸும் இலத்தீனில் உரையாடியவற்றைச் செழியனிடம் மொழி பெயர்த்துக் கூறினான் சிப்பியோ. சற்றைக்கெல்லாம், தாம் விளையாட்டாக அணிந்து கொண்ட மூன்றாவது முத்தாரத்தை அகஸ்டஸ் தம் கழுத்தைவிட்டு கழற்றினார். "நான் ஒன்றும் வேடிக்கைக்குச் சொல்லவில்லை ஜூனோ ! இதோ, இதுதான் அவர் கொண்டு வந்திருக்கும் பரிசு!' என்று அந்த முத்தாரத்தை அவளிடம் நீட்டினார். அப்படியா? ரொம்ப அழகாக இருக்கிறதே!" என்று அதனை வாங்கிப் பார்த்திட்ட அவள் ஓரக்கண்ணால் செழியனை நோக்கினாள். அவளுடைய பார்வையிலே நன்றியுணர்வு பொங்கி வழிந்திட்டது. அகஸ்டஸின் செயல், செழியனைத் திகைப்பில் ஆழ்த்தியது. அவர் இவ்வாறு தங்கள் குடும்பத்திற்கு வந்த ஒரு பரிசினை ஜூனோவுக்குக் கொடுத்திடுவார் என்று அவன் நினைக்கவே இல்லை. அவள்மீது அகஸ்டஸ் வைத்துள்ள எல்லையில்லாப் பாசத்தைப்பற்றி சிப்பியோ மொழிந்தவை யாவும் உண்மை என்பதை அவருடைய செயல் மூலம் உணர்ந்து கொண்டான் செழியன். அதே வேளையில், தன் தந்தையின் பரந்த மார்பினில் மின்னிய முத்தாரம் ஜூனோவின் கைக்குச் சென்றதுமே மோவாயினால் தன்