உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

கலைஞர் மு. கருணாநிதி


536 கலைஞர் மு. கருணாநிதி கிறார்கள் என்றாலும், இது எங்களுக்குப் புதுமையான அரசியல் நெறியே என்பதனை ஒப்புக் கொள்வதற்கு நான் வெட்கப்படவில்லை. ஆட்சித் துறையில், அரசு நிர்வாகத்தில் 'பிரின்செப்ஸ் அவர்கள் கொணர்ந்துள்ள சீர்திருத்தத் திட்டங்கள் என் சிந்தனைக்கு விருந்தளிக் கின்றன. என் நெஞ்சைக் கவர்ந்திட்ட மேலும் ஒரு புதுமை, காலத்தைக் கணக்கிடத் தங்கள் நாட்டவர் கண்டுபிடித்துள்ள 'காலண்டர்' நாட்காட்டி முறை. இவை போன்று தங்கள் ரோமாபுரிப் பேரரசுக்குப் பெருமை தரக்கூடியவைகளை எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம். எனினும் நேரம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். தங்கள் எல்லாரு டைய நல்லெண்ணத்திற்கும் எங்களுடைய வேந்தர் பெருவழுதிப் பாண்டியர் சார்பிலும் தமிழகம் முழுமையின் சார்பிலும் மீண்டும் ஒரு முறை நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். க செழியனின் உரையினை சிப்பியோ மொழி பெயர்த்திடக் கேட்ட செனேட் உறுப்பினர்கள் அடிக்கடி கரவொலிகளை எழுப்பித் தங்கள் களிப்பினைப் பறைசாற்றினர். அவனுடைய வாக்கு வன்மையினையும், எதனையும் நுணுகி நோக்கிடும் அறிவுக் கூர்மையினையும் அவர்கள் தங்களுக்குள் மெச்சிக் கொண்டனர். சில நொடிகளில் ஒரு பருமனான மனிதர் எழுந்து நின்றார். அவருடைய சட்டையிலே காணப்பட்ட ஊதா நிறப் பட்டைக்கோடு, காலணியிலே தென்பட்ட பிறை வடிவமான அலங்கார அணி, மார்பின் குறுக்காகப் போர்த்திருந்த 'டோகா' என்னும் மேலங்கி ஆகியவற்றைக் கொண்டு அவரும் ஒரு செனேட் உறுப்பினரே என்னும் தெளிவினைப் பெற்றிட்டான் செழியன். “புதிதாக வந்திருக்கும் தூதுவரிடம் அவருடைய நாடு, மொழி களைப் பற்றி எனக்கு ஏற்பட்டுள்ள சில ஐயப்பாடுகளைத் தெளிவு படுத்திக் கொள்ளலாமா?" என்று அகஸ்டஸை நோக்கிக் கேட்டார் அந்த செனேட் உறுப்பினர். 'ஓ! தாரளமாகக் கேட்கலாமே! நீங்கள் எந்த ஐயப்பாட்டினை எழுப்பி னாலும் அவர் சரியான விளக்கந்தந்திடுவார் என்றே கருதுகிறேன்." அகஸ்டஸ் இவ்வாறு பகர்ந்திடவும் செழியன் - செனேட் உறுப்பினர் இருவருக்குமிடையே இணைப்புப் பாலமாகத் தட்டுத் தடங்கலின்றி மொழி பெயர்த்திடத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான் சிப்பியோ. “திராவிட இனத்தவராகிய நீங்கள் இப்போதுள்ள தமிழகப் பகுதிக்குத் தெற்கே இருந்துதான் வந்தீர்கள் என்று சொல்கிறார்களே, சரிதானா?" என்று தம் முதல் கணையினைத் தொடுத்திட்டார் செனேட் உறுப்பினர்.