542
கலைஞர் மு. கருணாநிதி
542 கலைஞர் மு. கருணாநிதி பற்றி - சரியான முறையில் உங்கள் ஆட்சித் தலைவரிடம் எடுத்துச் சொன்ன உனக்கு எவ்வாறு நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. அது சரி; உனக்குத்தான் தமிழ் தெரியுமே! பிறகு ஏன் இலத்தீன் மொழியில் முதல் முதலில் என்னை வரவேற்றாய்?" "என்ன, அப்படிக் கேட்டு விட்டீர்கள்? வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரை வரவேற்றிடும்பொழுது சொந்த நாட்டுக்குச் சிறப்பிடம் தருவதுதானே சரியான முறை ஒழுங்கு -மரபு?" - ஆமாம், ஆமாம்; நீ மொழிவது முற்றிலும் சரி தான்.' சிறிது நேரம் அமைதியில் கழிந்திட்டது. இருவருக்குமே மேலும் என்ன பேசுவது என்னும் திணறல் போலும்! "எங்கள் ரோமாபுரி உங்களுக்கு எப்படி இருக்கிறது? பிடித்திருக் கிறதா?' -ஜூனோவின் கொவ்வைச் செவ்வாயிலிருந்து வார்த்தைகள் தான் இப்படி வந்தனவே அன்றி, அவளுடைய பளிங்கு விழிகளோ, 'என்னைப் பிடித்திருக்கிறதா?' என்று கேட்பது போலவே பேசின! அவளுடைய பார்வையின் பொருளைப்புரிந்தும் புரியாதவனைப் போல. "ஓ! மிக நன்றாகப் பிடித்திருக்கிறதே!" என்றிட்டான் செழியன்; தன்னுடைய பரந்த முகத்தினை இப்போது தரையை நோக்கியே கவிழ்த்துக் கொண்டான் அவன். "இங்கே, நீங்கள் பார்த்துக் களித்திட வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. ரோமாபுரியையே பளபளவென மின்னும் அழகுத் திருநகராக மாற்றுவதில் முனைந்து ஈடுபட்டுள்ளார் எங்கள் அகஸ்டஸ் பெருமகன்!" "சிப்பியோ கூட அப்படித்தான் சொன்னார்." "ஒரு நாளைக்கு, 'ஸ்டாடிலஸ்டராஸ்' அரைவட்டக் கலையரங்குக்குச் செல்வோம். அங்கே விலங்குகள் - வீரர்கள் - வேடிக்கையான முறையில் சண்டை போடுவார்கள்." "அப்படியா' என்று வியப்போடு கேட்ட செழியன் 'உன்னுடனா வரச்சொல்கிறாய்?' என்று உள்ளூர எண்ணிக் கொண்டான். சற்றைக்கெல்லாம் தேர்ச் சாரதி ஒருவன் வெளியில் நின்றவாறே அறைப் பக்கம் தலையைக் காட்டினான். "ஓ! நீ வந்துவிட்டாயா?" என்று ஜூனோ, செழியனை நோக்கி, “சரி கிளம்புங்கள் விரைவாக" என்றாள்.