உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544

கலைஞர் மு. கருணாநிதி


544 1 "ஆம்" கலைஞர் மு. கருணாநிதி "நீயும் எங்களோடு சேர்ந்து விருந்தினை அருந்தினால்தானே தவறாகும்! நீ வெறும் மொழி பெயர்ப்பு மட்டுந்தானே செய்யப் போகிறாய்? ஆகவே மற்றவர்கள் மறுப்பேதும் சொல்லமாட்டார்கள்; அஞ்சாதே! என்று ஊக்கமூட்டினார் அகஸ்டஸ். எதிலுமே எளிமையைக் கடைப்பிடித்திடுவதைப் பெரிதும் விழைந் திடும் ரோமானியப் பேரரசின் ஆட்சித் தலைவரான அகஸ்டஸ், உணவு முறைகளிலும் ஆடம்பரத்தை விரும்புவதில்லை. ஆனால் அன்றைக்கு என்னவோ விருந்து வகைகள் சற்று ஆடம்பரமாகவே பரிமாறப்பட்டன. வேக வைக்கப்பட்ட கிளிஞ்சல் மீன்கள், பன்றியிறைச்சி வறுவல், தோல் உரிக்கப்பட்ட முழுக் கோழி, கோதுமை ரொட்டி, அவியல் செய்யப்பட்ட முட்டைக் கோசு, பீட்ரூட், வெள்ளரிக்காய்கள், ஆப்பிள் பழங்கள், பேரிக் காய்கள்-என்று பல்வேறு உணவுப் பண்டங்கள் அங்கே தட்டுத் தட்டாகக் கட்டுப்பாடின்றி நிரம்பி வழிந்தன. போதை அளித்திடும் ஒயினும் ஆங்காங்கே கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றித் தரப்பட்டது. செழியனுக்கு இறைச்சி வகைகள் அவ்வளவாகப் பிடித்திடவில்லை. மீன்களை மட்டும் சுவை பார்த்தான். காய்கறிகளை விரும்பியுண்டான். ஜூனோ அவன் அருகிலேயே நின்று கொண்டு "அது நன்றாக இருக்கும். இது நன்றாக இருக்கும்..." என்று அவனை விடாப்பிடியாக உண்ண வைத்த வண்ணம் இருந்தாள். உணவை அருந்தியவாறே, விருந்திலே கலந்து கொண்டுள்ள புகழ் பெற்ற கவிஞர்கள் - அரசியல்வாதிகள் - கலை வல்லுநர்கள் - முதலா னோரை அறிமுகம் செய்திடலானார் அகஸ்டஸ். "இதோ இருக்கிறாரே. இவர்தான் மேசனஸ், நுட்பமான அரசியல் அறிஞர். ஆக்டியம் சண்டையில் நான் அந்தோணியின் படைகளைத் தோற்கடிக்கச் சென்ற வேளையில் இங்கே ரோமாபுரியில் அமைதி காத்திட்ட பெருமை இவரையே சாரும். தேர்ந்த நிருவாகத் திறமை படைத்தவர். எல்லாவற்றையும்விட இலக்கியத் தாகம் மிகுந்தவர். எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் ஒரு குழுவாக இணைத்து அவர்களிடம் வேலை வாங்குவதில் வல்லவர். நெடுங்காலமாகவே இனிய நண்பர்..... இதோ இவர்தான் கவிஞர் வெர்ஜில், எங்கள் நாட்டின் பழம் பெருமை வாய்ந்த மாட்சியினைப் பழச்சுவையினையும் மிஞ்சிடும் வண்ணம் பாக்களாக வடித்திடுவதில் வல்லவர்; வரலாற்றறிவு மிகுந்தவர்;