உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546

கலைஞர் மு. கருணாநிதி


546 கலைஞர் மு. கருணாநிதி "இல்லை." என்று தலையை அசைத்திட்டான் செழியன். "வியப்பாக இருக்கிறதே! சோமரசமே பருகிடக்கூடிய கீழை நாட்டுப் பகுதியிலிருந்து வந்துவிட்டு ஒயின் பிடிக்கவில்லை என்கிறீர்களே! -அகஸ்டஸ் இவ்வாறு பகர்ந்திடவும் கவிஞர் வெர்ஜில் குறுக்கிட்டார். சோமரசம் பருகுகிறவர்கள் விந்திய மலைக்கு வடக்கே வாழ்ந்திடும் ஆரியர்களே அன்றி இவர்கள் அல்லர்." "அப்படியானால் உங்கள் தமிழ்நாட்டில் மதுப்பொருளே கிடை யாதா?' என்று செழியனை நோக்கி ஓர் ஐயப்பாட்டினை எழுப்பினார் அகஸ்டஸ். “ஏன், 'கள்' என்று ஒரு போதைப் பொருள் இருக்கிறது." "அது எப்படி இருக்கும்? ஒயினைப்போல் உடல் நரம்புகளுக்கு உணர்ச்சியூட்டக்கூடியதா?" அது பாலைப் போல் வெண்மையாகத்தான் இருக்கும். உழைக்கும் பாட்டாளிகளின் அலுக்கையை அகற்றக்கூடிய உயிர்ச்சத்து அதில் இருப்பதாகச் சிலர் உரைப்பார்கள். ஆப்பம் முதலான உணவுப் பண்டங் கள் நன்றாக வெந்து மலர்வதற்குச் சில தாய்மார்கள் அதனைப் பயன் படுத்தியதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும், மயங்கித் தடுமாறி டும் அளவுக்குக் கள்ளே கதியென்று கிடப்பவர்களை எங்களு டைய மக்கள் அவ்வளவாக மதிப்பதில்லை." "நீங்கள் கூறுவது உண்மைதான் தூதுவரே! அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சுதான். மதுப்பொருள்களை மருந்துப் பொருள்களாகப் பயன்படுத்துவதோடு நின்று கொள்வதே நல்லது. அதனால்தான் நான் கூட எங்கள் நாட்டிலுள்ள மற்றவர்களைப் போல் ஒயினை மிகுதியாகப் பருகுவதில்லை"- அகஸ்டஸ் தம் வார்த்தைகளை முடிக்கு முன்னரே மேசனஸ் என்பவர் எழுந்தார்; கரகரப்பான குரலில் இவ்வாறு கூறலானார்: தூதுவரே! இங்கே வந்திடாத இன்னொரு தீவிரமான இளம் எழுத்தாளரைப் பற்றியும் உங்களுக்கு நான் சொல்லி வைப்பது என்னுடைய கடமையாகும்; ஓவிட் என்பது அவரது பெயர். காதலைப் என்பதுஅவரது பற்றி வருணிப்பதிலே அவர் மாபெரும் மன்னன். ஆண் - பெண் உறவுகளை... "நிறுத்து மேசனஸ், நிறுத்து! சிறுமையைச் சேர்ப்பவர்களைப் பற்றியெல்லாம் இங்கே விளம்பரப்படுத்திட தேவையில்லை. போலிப் புகழுக்காக -வயிற்றுப் பிழைப்புக்காக - காமக்களஞ்சியங்களை அவிழ்த் துவிட்டு இளம் உள்ளங்களைக் கெடுப்பவனெல்லாம் தரமான எழுத்தாள