உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556

கலைஞர் மு. கருணாநிதி


556 கலைஞர் மு. கருணாநிதி தமிழகத்தைவிட்டு ரோமாபுரிக்குக் கிளம்பிடும்பொழுது செழியனின் சிந்தனையை உராய்ந்திட்ட சிறு கவலை ஒன்று உண்டு; தனக்கு மொழி தெரிந்திடாத - நண்பர்களும் இல்லாத - ஒரு நாட்டிற்குச் செல்கிறோமே; அங்கே பொழுது எப்படிப் போகுமோ என்பதே அந்தக் கவலை. ஆனால், அவனுடைய கவலைக்கு இடமே ஏற்படாத வகையினில் பல்வேறு களியாட்ட அரங்குகளைக் கொண்டு அவனைக் கவர்ந்து இழுத்திட்டது ரோமாபுரி. ஒருநாள் பிற்பகல்! நீராட்டக் கட்டத்திலிருந்து தான் தங்கியுள்ள மாளிகைக்குத் திரும்பிய செழியன், வாசலில் வெண்புரவிகள் பூட்டப்பெற்ற தேர் ஒன்று நிற்பதனைக் கண்டு திகைப்புற்றான். தேரின் ஓரமாகவே அதன் நிழலில் நின்றுகொண்டிருந்த சாரதியின் வணக்கத்தினை ஏற்றுக்கொண்ட அவன் 'இந்த நேரத்தில் ஜூனோ ஏன் வந்திருக்கிறாள் அதுவும் தேரோடு? அகஸ்டஸ் ஒருவேளை அழைத்துவரச் சொல்லியிருப்பாரோ?' என்று எண்ண ஓட்டங்களை அசை போட்டவாறே படிகளில் மேலேறிச் சென்றான் பரபரப்போடு. அவன் எதிர்பார்த்திட்டவாறு முன்கூடத்தில் ஜூனோ இல்லை. பணியாளையும் காணோம். ஆனால், அறைக் கதவுகள் எல்லாம் திறந்து கிடந்தன. தற்செயலாக அவனது பார்வை படுக்கையறை நோக்கிச் சென்றிட்டது. அங்கோ? அவன் துயில்கின்ற கட்டில் மெத்தையில் ஒயிலாகப் படுத்திருந்தாள் ஜூனோ! 'சே! இந்த ரோமானியப் பெண்களுக்கு எந்த வரைமுறையுமே கிடையாதா? யார் படுக்கையில் யார் படுப்பது என்று எள்ளளவேனும் எண்ணிப் பார்த்திட வேண்டாமா?' என்று எரிச்சலுற்ற செழியன் அவள் அருகினில் சென்றிட்டான். மூங்கில் குருத்தினைப்போல் மழுமழுப்பான தன் கரங்களையே தலையணையாக மடக்கிக்கொண்டு மல்லாந்து கிடந்திட்ட அவள், அயர்ந்து உறங்குவதுபோல் காணப்பட்டாள். அவளுடைய நிலாப் பிஞ்சு நெற்றியிலே பசும் புல்லில் தேங்கிய பனித்துளி போல வேர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன. தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத தறுதலைப் பிள்ளைகள்போல் அவளுடைய சுருள் முடியின் பிடிப்புக்குள் அடங்காமல் ஒன்றிரண்டு சுருள் கேசங்கள் காற்றிலே சிலிர்த்தெழுந்து அந்த வேர்வை முத்துக்களுக்கு வெண்சாமரம் வீசிடக் காத்திருந்தன. பாதியாக அறுத்தும் அறுக்காமலும் விரிந்திட்ட கொய்யாக் கனிபோல்