உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586

கலைஞர் மு. கருணாநிதி


586 கலைஞர் மு. கருணாநிதி செனேட்டர்கள் இவ்வாறு செழியனை உச்சிமேல் வைத்துப் போற் றிப் புகழ்வதைக் கேட்கக் கேட்க அகஸ்டசுக்குப் பூரிப்புத் தாங்கவில்லை. "மதிப்புக்குரிய செனேட்டர்களே! உங்களுடைய உணர்ச்சிகளுக்கெல் லாம் எந்த அளவுக்கு வடிவம் கொடுத்திட இயலுமோ அந்த அளவுக்குத் தமிழகத் தூதுவருக்கு நம் நன்றியறிதலைத் தெரிவித்திட நடவடிக்கைகள் எடுத்திடுவேன் என்பதனை இங்கே உறுதியோடு உரைத்திட விழைகிறேன். தனிப்பட்ட முறையிலே அவருக்கு நான் எத்துணை கடன்பட்டிருக்கிறேன் என்று இயம்பிடத்தேவையில்லை. அவர் மட்டும் வேங்கைப் பாய்ச்சலில் விரைந்து வந்து மேசனசின் ஆட்களை விரட்டிடத் தவறியிருந்தால்... அதனை நினைத்தாலே என் நெஞ்சம் நடுக்குறுகின்றது. - அதற்கு மேல் அந்த மாபெரும் ஆட்சித் தலைவரின் நாவிற்கு வலுவில்லை. தான் எண்ணியவற்றை எடுத்துரைத்திட! உணர்ச்சிகளின் இறுக்கத்தினை தாங்கவொண்ணாமல் அவரது இதயம் விம்மிற்று. அந்த விம்மலின் வெளிப்பாடாகக் கண்ணீரும் வழிந்தோடிற்று. அந்த நேரத்தில்- தமிழகத்திலோ...?