உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632

கலைஞர் மு. கருணாநிதி


632 கலைஞர் மு. கருணாநிதி "போகிறது! நீ ஒருத்தியாவது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாயே!" என்றான் செழியன். 'ஆணாக வேடம் போட்டு என்னையே ஆலாய்ப் பறக்க வைத்தவள் இல்லையா? அதனால்தான் ஆடவர்களுக்குச் சார்பாக நீ பேசுகிறாய்! உன்னை அப்பொழுதே ஏதாவது செய்து மடக்கி இருக்க வேண்டும்; தப் பித்துக் கொண்டாய்?" என்று செல்லமாக சினந்திட்ட தாமரை, முத்துநகை யின் கன்னக் கதுப்பினை அழுத்தித் திருகி அவளைத் தண்டித்திடவே முனைந்துவிட்டாள். அந்தப் பெரிய மரக்கலம் முசிறித் துறைமுகப்பட்டினத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. தன்னுடைய அறையிலே தனியாக அமர்ந்திருந்த செழியன், பழங்கால நிகழ்ச்சிகளையெல்லாம் மனத்திற்குள்ளேயே அசை போட்டு மகிழ்ந்திட்டான்; அடுத்துத் தன் அருமைத் தாயகத்தினை அடைந்தவுடன் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகளைப் பற்றியும் தன்னுடைய சிந்தனைப் பறவையைச் சிறகடித்துப் பறக்க விட்டான். சிறிது நேரத்தில் பெண்கள் இருவரும் அவன் எதிரே வந்து நின்றனர். “என்ன முத்துநகை, இது? மறுபடியும் அந்த ஜூனோ எப்படி இங்கு வந்து முளைத்தாள்?" என்று வியப்புடன் வினவினான் செழியன். "இந்த மரக்கலத்திலிருந்தேதான் இப்போது வந்து முளைத்திருக் கிறாள் என்று நகைத்தவாறே விடை பகர்ந்திட்டாள் முத்துநகை. ஆமாம்; பழைய ஜூனோ மாதிரிதான் இப்போதும் தெரிகி றேனோ? - கொஞ்சலாகக் கேட்டாள் தாமரை. 'அசல் அவள் மாதிரியேதான் இருக்கிறாய்! ஆமாம்; ஏன் இந்தப் புதுக்கோலம்-இல்லை, பழங்கோலம்?" செழியனின் இந்தக் கேள்விக்கு முத்துநகைதான் மறுமொழி கூறினாள்: "இளவரசன் இளம்பெருவழுதி அவர்களுடைய பகைமையைத் தேடிக் கொள்ளாமல் இருக்க உங்களுக்கு ஓர் அருமையான திட்டம் வைத்திருக்கிறேன் என்று முன்பு கூறினேன் இல்லையா?" ஆமாம்.' 82 "அந்தத் திட்டத்திற்கு அடித்தளந்தான் இந்த இத்தாலிய நாட்டு எழிற்கோலம்!'