உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

639


ரோமாபுரிப் பாண்டியன் குலைசாய்ந்த(து) அய்யோ! செங் கோலோச்சும் செயல் வீரத் தலைசாய்ந்த(து) அய்யோ ! இத் தாரணியே புகழ்நட்புக் கலைசாய்ந்த(து) அய்யோ!' - என்றே கதறல் வெடித்ததுவே! ஊமைகளும் ஆமைகளும் உயர வைத்த சீரேணி! பூமாதின் பொறுமையெலாம் பொலிந்திட்ட திருமேனி! ரோமாபுரி வரைக்கும் தமிழ்மணக்கச் செய்த மலர்! பூமாதின் வயிற்றினுள்ளே புகல்தேடி மறைவதுவோ? வடிக்காத மழையையெலாம் வடித்தனவே விழிமுகில்கள்! துடிக்காத அலைகளெல்லாம் துடித்தனவே மனக்கடலில்! பிடிக்காத அழுக்காற்றுப் பிள்ளைகளும் குமுறினவே! வெடிக்காத இதயமுண்டோ பெருவழுதி இறந்ததனால்? 639 'வெள்ளியம்பலம்' என்னும் மதுரை மாநகரிலே துஞ்சிய அந்தப் பெருவழுதியின் மறைவினைக் கேட்டுப் பாண்டிய மண்டலம் மட்டுமா, பழந்தமிழகம் முழுவதுமே துயர இருளிலே புதைந்தது; அழுகைக் கடலிலே அமிழ்ந்தது! ஆனால், அந்தத் துயரத்தின் வடுக்கள் மறைந்திடுவதற்கு முன்பே - அழுகையின் ஓலம் அடங்கிடுவதற்கு முன்பே... ஏன், பெருவழுதிப் பாண்டியனின் சவ அடக்கம் முடிவுற்றதுமே - தலைநகரிலே கொம்பு சுற்றிக் கொடூரமாக வீசத் தொடங்கி விட்டது அரசியல் புயல். ஓர் அரசர் இறந்துபட்டதும் எல்லா நாடுகளிலுமே ஏற்படக்கூடிய வாடிக்கையான நெருக்கடி நிலையே மதுரை மாநகரிலும் ஏற்பட்டது என்றாலும், அரியணை ஏறுவதற்குத் தளபதி நெடுமாறன் வெளிப்படுத் திட்ட அடங்காத பேராசை பொதுமக்கள் அனைவர்க்கும் அதிர்ச்சி யினையே அளித்திட்டது.