பக்கம்:ரோம் நாட்டு வீரன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

எகிப்து மண்ணின் மன்னர்குலக் கடைசி மன்னனான டாலமியின் மகள் கிளியோபாட்ராவின் மெய்க் காதல் மூலம் தோற்றுவித்த ஆண் மகவுக்கு சீசரின் டாலமி எனப் பெயரிட்டு நைல் நதி நாகரீகத்தையும் டைபர் நதி நாகரீகத்தையும் ஒன்றாக்கி இரத்த பாசத்தை உண்டாக்கியவன் சீசர்.

வாழ்க்கையிலே வீழ்ந்தோர் வாழ்ந்ததில்லை என்ற வேதாந் தம் பேசுவோருண்டு. வாழ வெளிநாடு சென்றவர்கள், அங்கே வருந்தி உழைத்து வாழவேண்டுமேயன்றி, வாள் காட்டி பயமுறுத்திப் பிறகு கோல் தூக்கியாளக்கூடாது என்று சன்மார்க்கம் போதிப்பவர்களு முண்டு. தாயகத்திலிருந்து வேற்று நாட்டுக்குச் செல்வோர் எத்தனை நூற்றாண்டுகள் அங்கே வாழ்ந்தாலும் அன்னியரேயன்றி அந்த நாட்டாரல்ல என்ற அரசியல் மகுடி ஊதிகளுமுண்டு. பிறந்த நாட்டிலிருந்து பெயர்ந் தோடியவர்கள் இறந்த வாழ்க்கை வாழவேண்டுமே யன்றி சிறந்த வாழ்க்கை எங்ஙனம் அவர்களுக்குக் கிட்ட முடியும் என்று கிழட்டு நியாயம் பேசுபவர்களுமுண்டு.

தன்னம்பிக்கை யுடையவன், தளராத உறுதியுடையவன் வறுமையில்லாமல் வாழ நினைப்பவன் எவனாயினும் தான் அடி யெடுத்து வைத்த மண்ணைத் தனதாக்கிக் கொள்கின்றான். அவனிடும் ஓங்கார சப்தத்திற்கு அடங்கிவிடுகிறது அந்த மண்.

குடிபுகுந்த நாட்டில் குன்றுபோல் வசதிகள் குவிந்து கிடந்தாலும், தான் விட்டுச் சென்ற குள்ளக் குட்டிச் சுவர்களையும் வான் நுழையும் கூரைகளையும் நினைந்து நினைந்து நாசமாய்ப் போகும் சமூகத்தால் உண்டாக்கப்பட்டதல்ல ரோம். அதன் தோற்றுவாயே அலாதியானது.

சீசருக்கு முன்னே அவனியைக் குலுக்கிய கிரேக்கத்தின் காளை மாசிடோனியா மாவீரன் அலெக்சாந்தர். பனி மலையைத் தாண்டி இப்பாரிலும் அடியெடுத்து வைத்தவன் பிலிப் பின் செல்வன். ஜீலம் நதிக் கரையில் புருஷோத்தமன் ஒருவனே அவனை எதிர்த்தான். அலெக்சாண்டர் போர்க்களம் கண்ட முதல்நாள் தொட்டு கடைசிநாள் வரையிலும் அவனை எதிர்த்தவன் ஐரோப்பா கண்டத்தில் ஒருவனுமில்லை. அவன்