பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 15 டால்ஸ் : தரலேன்னா..? சோன்யா : எனக்கு தெரியுமே. என்றைக்கு என் இளமை என்னை விட்டுப் போச்சுதோ அன்றைக்கே நீங்க என்னை விட்டுப் போயிட்டீங்க. அந்த குடிகெடுப்பான் செர்ட்கோவ் என்றைக்கு வந்தானோ அன்றைக்கே என் புருஷன் எனக்கு இல்லாமெ போயிட்டாரு. நீங்க மட்டும் அந்தக் கதையைத் தரலேன்னா நான் இப்பவே ஆற்றிலே விழுந்தோ... விஷத்தைக் குடிச்சிட்டோ சாகப் போறேன். நான் பிறந்திருக்கவே கூடாது. அப்படிப் பிறந்தும் கல்லாப் போன உங்களுக்கு மனைவியா வாய்த்திருக்கக் கூடாது. நான் பாவி, நான் சாக வேண்டியவள்... சாகப் போகிறேன். (ஒட முயல டால்ஸ்டாய் பிடித்துக் கொள்கிறார்) டால்ஸ் : இதோ பாரு, உனக்கு அந்தக் கதைதானே வேணும்... (மேஜை ட்ராயரிலிருந்து புத்தகத்தை எடுத்து) இந்தா நீயே வெளியிடு. என்னையும் இந்த லெளகீக பாவத்துல தள்ளிட்டே... இப்போ ஆளை விடு. நான் செருப்பு தைக்கணும். சோன்யா . (புத்தகத்தைப் பெற்று) என்னைவிட உங். களுக்கு செருப்பு ஒசத்தியா போயிட்டுதோ. பண்ணைக்காரப் பயல்களுக்கு செருப்பு தச்சு தச்சு உங்க புத்தியும் செருப்பா போயிடுச்சு! டால்ஸ் : அப்படிச் சொல்லாதே, சோன்யா! செருப்பு தைக்கிறதுலே கேவலமில்லெ. என்ன செய்கிறோம்