பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
iv

          பதை உணர்ந்திருப்பார்கள். ’போதும் உங்கள் உபகாரம்’ என்ற அவரது சிறுகதை ’குமுதம்’ வார இதழில் வெளியாகி ‘இலக்கியச் சிந்தனை’ ’மதிப்பீட்டு அமைப்பினால் அம் மாதத்தில் வெளிவந்த தமிழ்ச்சிறுகதைகளுள் மட்டுமின்றி, அவ்வாண்டில் (1977) வெளி வந்த சிறுகதைகளுள் எல்லாமே தலைசிறந்த தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் கதையை மாதத்தின் சிறந்த கதையாக நான் தேர்ந்தெடுக்கையில், விமரிசக முறையில் அதைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராயும் வாய்ப்பைப் பெற்றேன். சமுதாயத் தில் மிக இழிந்து வறுமையில் நொடிந்த பாத்திரங்களைப் பற்றிய அந்தக் கதையில்நடை நல்ல தெளிவுடனும், யதார்த்தமான வர்ணனைகள் உளி செதுக்கி உருவாகிய கற்சிற்பத்தின்தோரணையில் கச்சிதமாகவும், சொற்கோப்பும் உரையாடல்களும் தம் இயல்பு சற்றேனும் கெடாமலும் அமைந்திருக்கக் கண்டு வியந்தேன். இவை எல்லா வற்றிற்கும் மேலாக அந்தக் கதையில் மனித உணர்வு என்னும் பண்புநலம் கதையினுள்ளே கருவில் உதித்த திருவாக ஆழப் பொதிந்து இருந்த விதம் அலெக்ஸாந்தர் டூமாஸ் (Alexandre Dumas) வின் படைப்பக்களையும் ஆதிசங்கர பகவத்பாதர் ’மானீஷப் பஞ்சகம்’ இயற்றிய சூழ்நிலையையும் எனக்கு நினைவு படுத்தியது.