பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 43 டால்ஸ் : மகளே! சொர்க்கம் உன்னுள்ளேயே இருக் கிறது’ என்று எழுதின இந்த டால்ஸ்டாயின் சொர்க்கம் யாரிடம் இருக்கிறது தெரியுமா?... இதோ இந்த அலெக்ஸாண்ட்ரியாவிடம்தான் இருக்கிறது. மில்டனின் மீண்ட சொர்க்கம் காவியத்தை உன்னை பார்ப்பதுமூலமே இப்பொ படிச்சுக்கிட்டிருக்கேம்மா. செர்ட் : நான்தான் போய் இவளை சத்தம் போட்டேன். தள்ளாத வயதிலே தந்தையை தவிக்க விடலாமான்னு நல்லா திட்டினேன். அலெக்ஸ் : இவரு சத்தம் போடாட்டாலும் நான் வந் திருப்பேன் அப்பா. சொல்லப் போனால் இவரு என்னைத் திட்டினதால் நான் ஒருநாள் தாமதமா வந்தேன். (டால்ஸ்டாய் சிரிக்கிறார்-தாய்ப்பாசம் பொங்க சோன்யா எட்டிப் பார்க்கிறாள்) டால்ஸ் : வா சோன்யா, ஏன் அங்கேயே நிற்கிறே. இது உன் வீடு... வா... வந்து உன் மகளைப் பாரு. சோன்யா : (தயக்கத்தோடு வந்து) நான்தான் உங்க எல்லாருக்கும் வேண்டாதவளா ஆயிட்டேனே... இருந்தாலும் இந்த பைத்தியக்காரியாலே தாய்ப் பாசத்தை அடக்க முடியலே. (விம்மிக்கொண்டே அலெக்ஸாண்ட்ரியா. என்னை எப்பவாவது நினைச்சி யாம்மா. (மகளின் தலையை வருடிவிடுகிறாள்-மகள் அணைத்துக் கொள்கிறாள்)