பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vi



    அமைப்பின் செயலாளராக இருந்து வந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் டால்ஸ்டாயின் வாழ்க்கையின் முக்கியமான சில நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம் ஒன்றைப் படைத்திடும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அந்த வாய்ப்பின் விளைவுதான் நீங்கள் உங்கள் கையில் இப்போது பிடித் திருக்கும் இந்த நூல்.
    ’லியோ டால்ஸ்டாய்’ நாடகத்தை எழுதி வருகையில் திரு. சமுத்திரம் அடிக்கடி என்னைச் சந்தித்து வந்தார். எனவே இந்த நாடகத்திற்காக அவர் எவ்வளவு துாரம் தளரா முயற்சிகளை மேற்கொண்டு நூல்கள் பலவற்றைப் படித்துச் செய்திகள் திரட்டினார் என்பதை நான் அறிவேன். கையெழுத்துப் பிரதியாக இருந்த நிலையிலேயே இந்த நாடகம் திரு.பி.ஏ.கிருஷ்ணன் குழுவினரால் அரங்கேற்றப்பட்டது. அதன்பின் வானொலியில் ஒலிபரப்பவும் பட்டது. எனவே நூல் வடிவில் இதைப் பார்க்கும் உங்களில் சில பலர் இதை ஏற்கெனவே கண்டு கேட்டு இரசித்திருக்கக் கூடும்.
    மைலாப்பூர் நுண்கலைக் குழு அரங்கில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நாடகத்தை நான் முதன்முறையாகப் பார்த்தபோது திரு.பி.ஏ. கிருஷ்ணன் டால்ஸ்டாயாகவும், தாம்பரம் லலிதா சோன்யாவாகவும் நடித் தனர். இரண்டு பாத்திரங்களும் மிகுந்த