பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 63 காஷா போனால் போகட்டும். இதோ என்கிட்ட ஒண்னு இருக்கு. டால்ஸ் : இருக்கட்டும். பிறக்கும்போது தொப்பியோட பிறக்கலே. இறக்கும்போதும்... (அலெக்ஸாண்ட்ரியா டால்ஸ்டாயின் வாயைப் பொத்துகிறாள்) அலெக்ஸ் : இன்னொரு தடவை அந்த வார்த்தையை சொல்லாதீங்கப்பா! டால்ஸ் : குழந்தே! (தலையை வருடிக் கொடுத்துவிட்டு) காஷா புறப்படு... அலெக்ஸ் : (விம்மிக்கொண்டே) எத்தனையோ பேர் உங்களைப் பார்க்க இங்கே ஓடி வருவாங்க... இப்போ நீங்களே இங்கிருந்து ஒடlங்க... டால்ஸ் : குழந்தே! நீ அழலாமா? இப்போ நீ சோன்யா வின் மகளல்ல. அவளுக்குத் தாய்... இதை மறந் துடாதே! அலெக்ஸ் : இன்னும் அந்த ராட்சஸியை மறக்கலையா? டால்ஸ் ; நீ நினைக்கிற மாதிரி குடும்ப பந்தம் அவ்வளவு சுலபமானதல்ல! அவளை முதன் முதல் இந்த மரங்கள் மத்தியில்தான் தனிமையில் சந்தித்தேன். குதிரையில் ஏறுவதற்குத் தயங்கினாள். நான்தான் 'இங்கு மரங்கள் மட்டும்தான் உன்னைப் பார்க்கும். தைரியமாய் வா’ என்றேன். அன்று. அப்படி நான் சொன்னதின் அர்த்தம் என்னவென்று புரிகிறது