பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதத்தைத் தூக்கி வைத்து, படிப்படியாய்ச் சதுக்கத் துப் பாதையினைப் பின்விடுத்த - படிநடந்து வருகின்றோம். எம் கரத்தில் உறுதியுடன் இறுகப் பிடித்திருந்த செங்கொடிகள் காற்றினிலே சீரந்தூக்கி பாடினவே, எங்கள் வரிசையிலே இருந்தோர் பேராற்றல் பொங்கிப் பிரவகித்து எங்கெங்கும் பொழிந்தோடிச் சிந்தனைப்பே ரு லகமெனக் சிலிர்த்துப் பரந்ததுவே! அந்தவொரு சிந்தனையும் அனை வருக்கும் ஒருமுகமாய் உந்தி யெழுந்ததுதான் ; உழைப்பாளி, விவசாயி, போர்வீரர் யாவருக்கும் பொதுவான சிந்தனைதான்: யாரி;னிநமக் கரதரவு? அறிஞர் லெனின் இல்லாது, இனி நந்தம் குடியரசை எப்படித்தான் நடத்துவது? லெனினவர்தம் ஸ்தானத்தில் இனியொருவர் தேவையன்றோ? அவரிருந்த ஸ்தானத்தை, அத்தகைய பேரிடத்தை எவர் மூலம் நிரப்புவது? எவ்வாறு நிரப்புவது? 137