பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 17 போயிடும் என்று யோசனை சொன்னர். சூடா ஏதாவது சாப்பிடுறியோ? பால் குடியேன்" என்று உபசரித்தார். "வெள்ளிக் கூஜாவிலே பாலு காய்ச்சி வச்சது இருக்கு." அவள் பேச்சு அவரது ஞாபக சக்திக்கு ஸ்விட்ச்" போட் டது போலும்! அடடா!' என்ருர் பதட்டமாக. மேலும் ஏதோ ஆபத்தை எதிர்பார்த்தவளாய் திடுக் கிட்டு நோக்கிளுள் நீலாவதி. 'கல்யாணத்துக்கு வந்த பரிசுச் சாமான்கள்-வெள்ளிப் பாத்திரங்கள் தாம்பாளம், கூஜாக்கள், பன்னீர்ச் செம்பு, டம்ளர்கள் இப்படி என்னெல்லாமோ வந்துதே-அவையெல் லாம் பந்தலிலேதானே இருந்தன. எல்லாம் தீயிலே உருகிப் போயிருக்குமே!’ என்று அங்கலாய்த்தார். 'இல்லை இல்லை. தீ கவிஞ்சு வரத்துக்குள்ளேயே அவற்றை அவசரம் அவசரமாக அள்ளி எடுத்து இரண்டாங் கட்டிலே போட்டிருக்கோம்' என்று ஒரு குரல் எழுந்தது. தீப் பிடித்தபோது அந்த வீட்டிலேயே இருந்தவர்களில் யாரோ பதில் கொடுத்தார்கள். - "நல்லவேளை! இல்லைஞ வீளுப் பொருள் நஷ்ட மல்லவா ஆகியிருக்கும். இப்போ உயிர்ச் சேதமுமில்லை. பிரமாத மான பொருள் நஷ்டமும் இல்லை. எல்லாம் தெய்வத்தின் கிருபைதான்' என்று வேதாந்தம் பேசத் தொடங்கினர் பண்ணையார். தெய்வ சோதனேன்னுதான் சொல்லணும்' என்று பெருமூச்செறிந்தாள் நீலாவதி, தீ எப்படிப் பிடித்தது?" என்னைக் கேளு நீ! நாளு இங்கே இருந்தேன்! நான்தான் பட்டணப் பிரவேசத்து கூடவே போயிட்டேனே' என்ருர் பண்ணையார். . 'எனக்கும் தெரியாது தான். பட்டணப் பிரவேசம் புறப்பட்டுப் போனதும் எனக்குத் துக்கக் கிரக்கம். பகலெல்