பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் காலம் வேகமாக ஓடுகிறது. அது ஒடுகிற வேகத்தில் எங்கும் எவ்வளவோ மாறுதல்களை விதைத்துக்கொண்டே போகிறது. காலவேகத்தில் நாடுகளிலும், மனித சமூகங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அரசியல் ரீதியில் புதுமைகளும் புரட்சிகளும், ஆட்சி மாறுதல்களும் ஏற்படுவது பளிச்செனப் புலனுகும். அதே சமயத்தில், மக்க வரின் வாழ்க்கை முறைகளில், நம்பிக்கைகளில், பழக்க வழக் கங்களில் மெதுமெதுவாக நிகழ்ந்து வருகிற மாற்றங்கள் போதிய கவனிப்பைப் பெருமலும் போகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் தலைமுறைக்குத் தலைமுறை. பல விதமான புறக்காரணங்களிலுைம் அக உந்துதல்களாலும், மக்களின் நோக்கில், கருத்தில், எண்ணங்களில், செயல்களில் எல்லாம் எவ்வளவோ பாதிப்புகள் ஏற்பட்டு மாற்றங்கள் மலர்ந்துள்ளன: மலர்ந்தும் வருகின்றன. விஞ்ஞான கண்டு பிடிப்புகளும், நாகரிக சாதனங்களும், கல்வியும் சட்ட திட் டங்களும் அலை அலையாய் பரவி வருகிறபோது, மனித சமூக வாழ்வும் தனி மனித வாழ்க்கையும் பலவிதமான மாறுதல் களையும் அனுபவிக்க நேர்வது வழுவல: கால வகை யினனே!" இவ்வாறு காலம் நிகழ்த்தி வருகிற சமூக, தனி மனித, நாட்டு ரீதியான மாற்றங்களே, புதுமைகளை, தேய்வுகளே.