பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் - 101 கொண்டிருக்கிறாரே! இவர் அல்லவோ புருஷ சிங்கம் இவர் அல்லவோ புருஷரில் சிரேஷ்டர் தேகத்தில் மாத்திரம் அழகைப் பெற்று, அதை ஆபரணங்களினாலும், உடைகளினாலும், பரிமள கந்தங்களினாலும் அலங்கரித்துக் கொண்டு, செல்வச் செருக்கை அடைந்து இறுமாந்திருக்கும் போலிப் பிரபுக்கள், குணத்தழகைப் பெற்ற இந்த வள்ளலின் பாத தூசிக்கும் ஒப்பாவரோ புருஷனை அடைவதாய் இருந்தால் இவரையே அடைதல் வேண்டும். இல்லா விட்டால் இந்தத் தேகத்தை அக்கினிக்கு இரையாக்க வேண் டும். இருக்கட்டும்; இன்று சாயங்காலம் போய் முயன்று பார்க் கிறேன். இடம் மாதவராயருடைய மாளிகைக்குள் ஒரு சிறிய பூஞ்சோலை. காலம் மாலை. அங்கம் 2 காட்சி 1 (ளேபரமேசன் வருகிறான்) (தனக்குள்) மாதவராயர் வஸந்தஸேனையின் வரவை அதிக ஆவலோடு எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார். இவருக்கு அவள் பேரில் இவ்வளவு ப்ரேமை உண்டாகக் காரணமென்ன! அவள் கேவலம் அற்ப புத்தியும் பேராசையுமுடைய தாஸி அல்லவோ எவ்வளவு ஐசுவரியத்தைப் பெற்றிருந்த போதிலும் அவளுடைய ஜாதிக் குணமாகிய நிர்தாrண்யம் போகவில் லையே! வைர ஸ்ரத்தைப் பார்த்தவுடனே, வெளி வேஷமாக வாவது ஒரு உபசார வார்த்தைக்கூடச் சொல்லாமல், உடனே அதை ஆத்திரத்தோடு பிடுங்கிக் கொண்டாளே வேசைக்குக் காசின் மேலாசை என்பது சரியாய்ப் போய் விட்டதே! அவளுக்கு எவ் வளவோ செல்வம் இருந்தும் மேன்மேலும் அபகரிக்கும் புத்தி இருக்கிறதே யொழியத் தயை, இரக்கம் ஈகை முதலிய குணங் கள் இல்லையே! தண்டில்லாத தாமரையும், தஸ்கரம் செய்யாத தட்டானும், சண்டையில்லாத சங்கமும், பேராசை இல்லாத தாஸியும் இல்லையென்று பெரியோர் சொல்வது நிஜமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/103&oldid=887313" இலிருந்து மீள்விக்கப்பட்டது