பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 145 பத்ம : என்னைப் போல அடிமைத் தொழில் செய்வதே அதற்குப் பலன். ஆகையால் மேலும் தீமை செய்ய மாட்டேன். வீர: உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவரை அது அடிமையாக் கும். நீ தான் அடிமையாய் இருக்கிறாயே. உன்னை அது என்ன செய்யப் போகிறது? பயப்படாதே. நான் சொல்வதைச் செய். பத்ம நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள் அடிமையானால் அடிமை இன்னும் எந்த விதமானதாழ்ந்த நிலைமைக்குப் போக வேண்டுமோ அதை நாம் ஊகித்துக் கொள்ள வேண்டாமா? வீர (அடிக்கிறான்) போக்கிரி மறுத்து மறுத்துப் பேசுகி றாயா? உனக்கு அவ்வளவு துணிபா பத்ம : என்னை அடித்தாலும் சரி கொன்றாலும் சரி செய்யத் தகாத காரியத்தை நான் ஒருக்காலும் செய்ய மாட்டேன். வஸ (தோமுனைப் பார்த்து) ஐயா இந்த ஆபத்தில் நீர் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். (வணங்குகிறாள்) தோழ மகாப் பிரபு கோபிக்க வேண்டாம். பத்மநாபன் சொல்வது சரியான விஷயம். எவ்வளவோ புண்ணியம் செய்து பெற்ற இந்த மேன்மையை ஏன் இழக்கப் பார்க்கிறீர்கள்? வீர (தனக்குள்) இந்த இரண்டு கழுதைகளும் இதைச் செய்ய அஞ்சிப் பின் வாங்குகிறார்கள். இராஜாவின் மைத்துன னாகிய என்னை எதிர்காலம் என்ன செய்யப் போகிறது. (கோபத் தோடு) அட பத்மநாபா என் முன்பாக நிற்காதே போ அப்பால் (உதைக்கிறான்) பத்ம இதோ போய் விடேன். (அப்பால் போகிறான்) வீர (தன் அங்க வஸ்திரத்தை இறுகக் கட்டிக் கொண்டு) அடி வஸந்தஸேனை வா இப்படி; விடு உன் பிராணனை: (அவளைப் பிடிக்கப் போகிறான். தோமுன் அவனைத் தடுக்கும் பொருட்டு பிடிக்கிறான்; அவன் கீழே விழுகிறான்). வீர (எழுந்து அடே துஷ்டா உன் எஜமானைக் கொல்லவா நினைக்கிறாய்? இவ்வளவு காலம் என்னுடைய அன்னத்தைத் தின்று வளர்ந்த நீ எனக்கு விரோதமாக நடக்கிறாய் அல்லவா? வ.கோ.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/147&oldid=887406" இலிருந்து மீள்விக்கப்பட்டது