பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் சனம் ஏறிவிட்டான். உயர்குலப் பிறப்பும் நற்குணமும் பெற்ற தங்களுக்குத் தன் மரியாதையைச் செலுத்த என்னை அனுப்பி னான். மாத அதிசயம்! என்ன இதுதான் சர்வ வல்லமை உடைய கடவுளின் செயலோ? சசி கடைசியாக உங்களுடைய வண்டியில் ஏறிப் போன அந்த உதவியை அவன் மறக்கவே இல்லை; இனி எப்போதும் மறப்பதில்லை என்றும் தெரிவித்தான். நீங்கள் செய்த பேருத விக்குச்சன்மானமாகத் தங்களை முதல் மந்திரியாக்கி இருக்கிறான். மாத: ஹா. கருணாநிதியே! உன்னுடைய திருவிளையாட்டை என்ன என்று சொல்லுவேன்? ஜனங்கள் அவனை இப்படி இழுத்துக் கொண்டு வாருங் கள்; இப்படி இழுத்து வாருங்கள், துஷ்ட ராஜனுக்குத் தகுந்த மைத்துனன்; உதையுங்கள்; கொல்லுங்கள், குத்துங்கள். இனங்கள் வீரசேனனைக் கட்டி இழுத்து வருகிறார்கள்) வீர : ஐயோ! ஐயோ! நாயை அடிப்பதைப் போல அடிக் கிறார்களே கொல்லுகிறார்களே! என்ன செய்வேன்? யாரிடத் தில் உதவிக்குப் போவேன்? விரோதிகள் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டார்களே ஒன்றும் தோன்றவில்லையே! அதோ மாதவராயர் இருக்கிறார் அவரை வேண்டிக் கொள்கிறேன். (அவர்காலில் விழுந்து/ஐயா! என்னை நீரே காப்பாற்ற வேண் டும். இவர்கள் என்னைக் கொல்லுகிறார்கள். ஜனங்கள் ஸ்வாமி அவனை இப்பால் உதைத்துத் தள்ளுங்கள். துஷ்டனை ஒழித்து விடுகிறோம். வீர ஒ மாதவராயரே! இந்தச் சமயத்தில் எனக்கு உம்மைத் தவிர யாவரும் துணை இல்லை. காப்பாற்ற வேண்டும் அபயம்! மாத வீரசேனா பயப்படாதே! நீ என்னை விரோதியாக மதிக்கிறாய். நான் உன்னை அப்படி நினைக்கவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/192&oldid=887504" இலிருந்து மீள்விக்கப்பட்டது