பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் பெறுகிறோம். தெய்வத்தை ஆராதிப்பது வீணாகுமென்று நினை யாதே. மாரடித்த கூலி மடிமேலே என்பார்களே அவ்விதம் இதில் நாம் உடனே பலனை விரும்பலாமோ? அரசன் அன்று தரும்! தெய்வம் நின்று தரும். நமக்கு எது நன்மையோ அது கடவு ளுக்கு நன்றாய்த் தெரியும். அவர் அதை அவசியம் செய்வார். நேரமாகிறது. இருள் அதிகமாகச் சூழ்கிறது. சீக்கிரம் போய் விட்டு வந்து விடு. ஸோமே : இந்த இருளில் வெளியில் போக எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. ஊரில் துஷ்டர்களும், துன்மார்க் கர்களும், திருடர்களும் அதிகரித்து விட்டனர். இப்பொழுது அவர்கள் அலைந்து திரியும் சமயம். நான் இந்த இருளில் வெளி யில் போவேனாகில் தேரைக்காகக் காத்துக் கொண்டிருந்த பாம் பின் வாயில் வந்து விழுந்த சுண்டெலியைப் போல நான் துன்பப் பட வேண்டி வரும். மாத சரி. அப்படியானால் கொஞ்ச நேரம் உட்கார் ஜெபம் செய்து விட்டு நானும் வருகிறேன். இரண்டு பேருமாய்ப் போக லாம். - ஸோமே ; அப்படியே! (இருவரும் ஒரு பக்கமாப்ட் போகிறார்கள்.) (அந்தத் தெருவில் வளந்தவேனை முன்னால் ஓடி வர, அவளைத்துரத்தியவண்ணம் விரஸேனனும், அவன் தோழனும் சேவகனும் வருகின்றனர்) வீர அடி வஸந்தஸேனை ஓடாதே நில் நில். தோழ வஸந்தஸேனை ஏன் இந்தப் பாடுபட்டு ஓடுகிறாய்! இப்படி ஒட உனக்கு நாணம் இல்லையா? பரத நாட்டியத்தில் அழகாய் உபயோகப்படுத்த வேண்டிய உன்னுடைய பாதங்களை ஏன் இப்படி வதைத்துக் கொள்கிறாய்? வேடனால் துரத்தப் படும் மான் நாற்புறங்களையும் பார்த்துப் பயந்து மருண்டு ஒடுவதைப் போலச் செல்கின்றாயே! நில் நில்! பயப்படாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/26&oldid=887531" இலிருந்து மீள்விக்கப்பட்டது