பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 55 கோபித்துக் கொள்வீர்களோ? என்று இதுவரையில் கேட்காமல் இருந்தேன். முகமெல்லாம் வெளுத்துப் போய்விட்டது! அடிக்கடி மெய்மறந்து ஏதோ விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்த வண்ணமாகவே இருக்கிறீர்கள். ஊணுறக்கம் முதலியவற்றை யும் அலட்சியம் செய்கிறீர்கள். மாந்தளிரையும் வாழையின் குருத்தையும் போன்ற உங்களது மெல்லிய அழகிய தேகத்தை ஏதோ ஒரு மனப்பிணி வருத்திக் கருக்குகின்றதே! தயவு செய்து என்னிடத்தில் தெரிவியுங்கள். எந்த காரியத்தையும் மனதி லேயே இரகசியமாய் வைத்துக் கொண்டு தனிமையில் வியாகூலப் படுவானேன்? ஆப்தர்களான என்னைப் போன்றவர்கள் எதற் காக இருக்கிறோம்? விசேஷமென்ன என்பதைத் தெரிவித்தால் இதில் என்னால் ஏதாவது உதவி செய்யக் கூடுமானால் அதைச் செய்கிறேன். வஸ் (நாணத்துடன்) அப்படி ஒன்றையும் காணேனே! நான் சாதாரணமாக எப்பொழுதும் இருப்பதைப் போலத் தானே இருக்கிறேன். சர்க்கரை கசப்பது சர்க்கரையின் குற்றமல்லவே! வாயின் குற்றமல்லவா. ஆகையால் உன் கண்களிலேதான் ஏதோ மாறுபாடு உண்டாயிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். மல்லி. அம்மா! (சங்கல்பமே என்ற கீர்த்தனையின் வர்ணமெட்டு) ப. ஸஞ்சலமே யாதோ மனதில்? தாயே நீ ரதை யினிப் போக்குவீர் (ஸ்) அ. நஞ்சானவே ஆகாரந்துயிலும், நங்கை நீ விர் வருந்தயான் சகிப்பெனோ? ச. என்ன வேதனையோ? இனியும் நாணமோ? என்ன கோலமெனது தேகம் பதைக்குதே! அன்னாய்! துயர்போது மித்தொடு, என்ன தேவை வருத்துதோ கூறுவீர். (ஸ்) அம்மணி எப்போதும் என்னைப் பரிகாசம் செய்வதைப் போல இப்போது செய்வது தவறு. யாவரிலும் உயர்ந்து ஆகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/57&oldid=887599" இலிருந்து மீள்விக்கப்பட்டது