பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1. பூமி நிறைபல தீமைகளில்மிடி போலலுதை துயர் எதுவேறு? போக செறிபுகழ் யாவரொருமொழி கூறவருபவர் புவிமீது? 2. மான மணியென நாடுமனிதர்கள் வாழ இடமிது சரியாமோ? தான தவமெனு மோது பலவகை யான அறியவை உளவாமோ. 3. மாது வயிறுறு காலமுதலிது வாதுதருதுயர் நிலையாகும்? மாலை தனிலுறு காலன் வரும்வரை யாவரிடரினில் அழிவாரோ? - 4. பாவியெனையினி யாவதளியொடு பாதமலருற அருளிசா? பாவவுலகினில் வாழல்பெருமிடர் போதுமடி யிணைதருவாயே. “மானமழிந்த பின் வாழாமை முன்னினிதே' என்று சொன்னவர் அதிமேதாவியென்பது இப்பொழுதே பரிஷ்காரம் ஆயிற்று. ஸோமேசன் தன்னுடைய மனோ வேதனையில் ஏதா வது அக்கிரமமான காரியத்தைச் செய்துவிடப் போகிறானோ என்று என் மனம் கவலைப்படுகிறது! ஸோமேசா ஸோமேசா அங்கு என்ன செய்கிறாய்? (ளேபரமேசன் வருகிறான்.) ஸோமே ; ஸ்வாமி களவு போன நகைகளுக்குப் பதில் நகை செய்கிறேன். மாத என்னுடைய மூடத்தனத்திற்காக நகை செய்கிறாயோ? அல்லது என் விதியை நினைத்து நகை செய்கிறாயோ? ஸோமே நம்மை அவமானப்படுத்த எண்ணும் விதியைப் பார்த்து இந்த வைர ஸரம் நகை செய்கிறதைப் பாருங்கள். மாத (திடுக்கிட்டு) ஸோமேசா இதென்ன இது? என்ன காரியம் செய்தாய்? எங்கிருந்து இந்த நகையை அபகரித்துக் கொண்டு வந்தாய்? ஸோமே : நான் எங்கிருந்தும் அபகரிக்கவில்லை. புருஷ னுடைய யோக்கியதைக்குத் தகுந்த உத்தம குண மனைவியர் செய்யக் கூடிய காரியமே இது காணாமற் போன நகைகளுக்குப் பதிலாய் இதை அனுப்பும்படி தங்கள் பிராண பத்தினி இதை அனுப்பினார்கள். தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/82&oldid=887652" இலிருந்து மீள்விக்கப்பட்டது