கடைமுக ஸ்நானம்
129
அவ்விதம் உரையாடிய வண்ணம் அவர்கள் தங்களது போஜனத்தை முடித்துக் கொண்டனர்.
அன்றைய பகலெல்லாம், அவ்வூரிலிருந்த கோவில்கள், குளங்கள், கடைகள், முதலியவற்றையும், அருகிலுள்ள 'தில்லை ஸ்தானம் முதலிய சப்த ஸ்தலங்களையும் தரிசனஞ் செய்துவிட்டு, அன்றிரவும் அவ்விடத்தில் தங்கியிருந்து மறுநாள் விடியற்காலை ஊருக்குப் போக வேண்டுமென்று அவர்கள் தீர்மானம் செய்து கொண்டனர்.
அவ்வாறே அவர்கள் அன்று பகலில் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இரவில் அந்த மெத்தை வீட்டில் தங்கினார்கள். பகலில் வந்ததைப் போலவே இரவிலும் நேர்த்தியான போஜனம் வந்து சேர்ந்தது. அவர்கள் மிகுந்த களிப்போடு போஜனம் உட்கொண்டனர்; அருகிலிருந்து ஜன்னலின் வழியாக அடிக்கடி ஆற்றை நோக்கி ஆநந்தம் எய்தினர். இரவில் தண்ணின் குளிர்ச்சி அதிகமாக உட்புறத்தில் வீசியதாதலின், அங்கு சகிக்கவொண்ணாத குளிர் உண்டாயிற்று; அவ்வீட்டில் இரண்டு காந்த விளக்குகள் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஆற்றின் அக்கரையில் தோன்றிய எண்ணிறந்த விளக்குகளைப் பார்த்துக் கொண்டும் சம்பாவித்துக் கொண்டும் இருந்த பின்னர், அவர்கள் சயனித்துக் கொள்ள நினைத்தனர்; அப்போது பீமராவ் கிழவனிடத்தில் ஒரு போர்வையைக் கொடுத்து விட்டு, சற்று தூரத்திலிருந்த கிருஷ்ணவேனிக்குப் பின்புறமாகப் போய் அவள்மீது ஒரு சால்வையைப் போர்த்தினான். அவள் மிக்க சந்தோஷமாக அதை ஏற்றுக் கொண்டாள்.
அதன் பிறகு, அடுத்த ஜன்னலில் நின்று கொண்டிருந்த மல்லிகாவுக்கும் அவ்விதமே பீமராவ் ஒரு சால்வையை போர்த்த முயன்றான். அவள், நாணத்தோடு அப்பால் விலகி, அவளுக்குப் பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பவானியம்மாள்புரத்து சமுத்திரக்கரையில் வஸந்தராவ் தன் மீது சால்வையைப் போர்த்தியதும், அவரது சம்பந்தமான மற்ற விஷயங்களும் ஒன்றின் பின் ஒன்றாக நினைவிற்கு வந்தன. அவர் அப்போது எங்கிருக்கிறாரோ, தன்னைப் பற்றி நினைப்பதையே விட்டு விட்டாரோ, தாம் புரிந்த வஞ்சகத்தைப் பற்றி நினைத்து அவர் கழிவிரக்கம் கொள்ளுகிறாரோ, அல்லது, வேறொரு மங்கை
வ.ம.-10