228
வஸந்தமல்லிகா
ஆகையினாலே தான் இது உண்மை என்பதை என் மனசு நம்ப மாட்டேன் என்கிறது.
மோக : உண்மையைத் தெரிவிக்கிறேன். உன்னுடைய பாட்டி நிரம்பவும் ஏழையான குடும்பத்தைச் சேர்ந்தவள். பழைய ஜெமீந்தார் பரசுராமபாவா அவளை ரகசியமாகக் கலியாணம் செய்து, பவானியம்மாள்புரத்து மாளிகையில் எவருக்கும் தெரியாமல் வைத்திருந்தார்; அவருக்கு அவளால் பிறந்த பெண்ணை பூனாவில் ஒருவருக்குக் கலியாணம் செய்து கொடுத்தார். அவர்களே உன்னுடைய தாய் தகப்பன்மார், இந்தக் கலியாணங்களெல்லாம் ரகசியமாக நடந்தமையால் விவரம் எவருக்கும் நன்றாகத் தெரியாது.
மல்லி : அதிருக்கட்டும். பெரியவர் சாஸனத்தைப் படத்திற்குள் வைக்க வேண்டிய காரணமென்ன?
மோக : அதன் காரணந்தான் எங்களுக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. சகாராம் ராவுக்கு இந்த ரகசியம் தெரியாமலிருக்க வேண்டும் என்றும், அந்தப் படத்தை உன்னிடத்தில் கொடுக்கும்படி சொல்லிவிட்டுப் போனால், எப்போதாகிலும் நீ அதிலிருக்கும் சாஸனத்தை எடுத்துக் கொள்வாய் என்றும் நினைத்து அப்படிச் செய்திருக்கலாம்.
மல்லி : இதனால் எனக்கு எவ்வளவு பொருள் சேரும்?
மோக : இந்தச் சென்னை ராஜதானியிலுள்ள சமஸ்தானங்கள் எல்லாவற்றிற்கும் பவானியம்மாள்புரம் ஜெமீன் நிரம்பவும் பெரியது. பணமாக இரண்டு கோடி ரூபாயும், ஜெமீன் கிராமங்களும், மாளிகைகளும் வந்து சேரும். கிராமங்களிலிருந்து வருஷ வருமானம் நான்கு லக்ஷம் ருபாய் வரலாம். வஸந்தராவ் வந்த பிறகு அவர் அவற்றில் அதிகம் செலவு செய்யவில்லை.
மல்லி : ஆம்; எல்லாம் இப்போது அவருடைய சொத்தென்பதை சுத்தமாக மறந்து விட்டேன்.
மோக : இனி அவருடையது ஒன்றுமில்லை. எல்லாம் உன் னுடையது. அவரும் விகாரமின்றி யாவற்றையும் கொடுத்து விடக்கூடியவரே.