உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7-வது அதிகாரம்

சொக்குப்பொடி

றுநாட்காலையில் துக்கோஜிராவும் மடந்தையர் மூவரும் தங்களது வீட்டையடைந்தனர். ஆனால், மற்றவர் மல்லிகாவுடன் ஒரு வார்த்தையேனும் பேசாமல் கடுகடுத்த முகத்தைக் காட்டிய வண்ணமிருந்தனர். சிறிது நேரத்தில் துக்கோஜிராவ் தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டு ஏதோ அலுவலின் பொருட்டு வெளியிற் போய்விட்டான். முந்திய நாளிரவில் தனக்கும் ஜெமீந்தாருக்கும் நடந்த சம்பாஷணை முதலியவை கனவோ அல்லது நனவோவென்று நினைத்து மல்லிகா இன்பமும் ஏக்கமும் அடைந்தவளாய்ச் சமையலறையிலிருந்தாள்.

அப்போது கமலா ஸீதா ஆகிய இருவரும் மெல்ல சமையலறைக்குள் நுழைந்தார்கள். கமலா எதையும் கவனியாதவளைப் போல நடித்து, "என்ன மல்லிகா ஏன் உன் முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது?" என்று அலட்சியமாகக் கேட்டாள்.

"என் முகம் எப்படி இருக்கிறது? எப்போதுமிருப்பதைப் போலத்தானே இருக்கிறது. ஒன்றும் விசேஷத்தைக் காணேனே!" என்று விடையளித்தாள் மல்லிகா.

"விசேஷமிருந்தாலும் நீ அதை எங்களிடத்தில் சொல்லுவாயா?" என்று குத்தலாக மொழிந்தாள் ஸீதா. மனதில் உடனே ஒருவித ஸஞ்சலத்தையடைந்த மல்லிகா, "என்ன இன்றையதினம் என்னை இப்படிப் பரிஹாஸம் செய்கிறீர்கள்? என்மேல் கோபம் உண்டாகும்படி நான் உங்கள் விஷயத்தில் யாதொரு குற்றமும் செய்யவில்லையே!" என்றாள்.

"அடி மல்லிகா மாயக்கள்ளியென்பது உனக்கே தகும். நீ பலே ஆசாமி” என்றாள் கமலா.

"ஊமை ஊரையழித்து விடாதா” என்றாள் ஸீதா. "வாயைத் திறக்காமலிருந்தே ஒரு க்ஷணத்தில் சொக்குப்பொடி போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/74&oldid=1229339" இலிருந்து மீள்விக்கப்பட்டது