பக்கம்:வஞ்சிமாநகரம் (நாவல்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

7



வருமாறு தம்முடைய அந்தரங்க ஒற்றர்களாகிய வலியனையும் பூழியனையும் அனுப்பி வைத்தார் அழும்பில்வேள். கொடுங்கோளூர் படைக்கோட்டத் தலைவனாகிய குமரன் இளம்பருவத்தினன் - போர் முறைகளிலும் எதிரிகளை முறியடிக்கும் தந்திரங்களிலும் வில்லவன் கோதையைப்போல அவ்வளவு வல்லவன் இல்லை என்றாலும் பேரழகன். குமரனுடைய கம்பீரமே தனி மீசை அரும்பத் தொடங்கும் பருவத்து இளைஞர்களின் மேல் அழும்பில்வேளுக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. முதுமையையும் அரசதந்திர நெறிகளையுமே பெரிதாக மதிக்கிறவர் அவர். என்றாலும் இப்போது கொடுங்கோளுர்க் குமரன் என்ற மீசை அரும்பும் பருவத்து இளைஞனைக் கொண்டுதான் தம் காரியங்களைச் சாதித்துக்கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு. எதைக் கொண்டு எந்தக் காரியத்தை எப்போது சாதிக்கலாமோ அதைக்கொண்டு அந்தக் காரியத்தை அப்போது சாதிக்க வேண்டும் என்பது அழும்பில்வேளின் முடிவு. சிறிய கருவிகளைக் கொண்டும் பெரிய காரியங்களைச் சாதிக்கலாம். பெரிய கருவிகளைக் கொண்டுதான் பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டுமென்பதில்லை. எப்படிச் சாதித்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம் - என்று கவனிக்கிறவர் அவர் எதனால் சாதிக்கிறோம் என்ற காரணமோ, காரியம் நிறைவேறியபின் பயனற்றதானாலும் ஆகிவிடலாம் என்றும் பல சமயங்களில் அவர் கூறுவதுண்டு. அரச தந்திரச் சிந்தனைகளில் சேரநாடு முழுவதும் தேடினாலும் அழும்பில்வேளுக்கு இணையானவர்கள் கிடையாது என்று முடிவாகி யிருந்தது. அத்தகைய அரசியல் வல்லவர் பேரரசரும் பெரும்படைத் தலைவரும் ஊரிலில்லாத இச்சமயத்தில் கொடுங்கோளுர்க் குமரனை அழைத்துவரப் பணித்திருந்தார் என்றால் அதில் ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டுமென்றே தோன்றியது. மகோதைக் கரையில் கொடுங்கோளுரிலிருந்து ஆடகமாடம் வரையில் கடற் கொள்ளைக் காரர்களையும் அவர்கள் தலைவனான ஆந்தைக் கண்ணனையும் பற்றிய பயம்