பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வஞ்சி முதுர் வைகைக் கரையில் மதுரை, காவிரிக் கரையில் உறையூர் எனப் பாண்டிநாட்டுத் தலைநகரமும், சோனாட்டுத் தலைநகரமும் பேராற்றங்கரையில் இடம் பெற்றிருத்தலைப் போன்றே, சேரநாட்டுத் தலைநகராய வஞ்சியும் ஒரு பேராற்றங்கரையிலே இடம் பெற்றிருந்தது. வஞ்சி மாநகர்க்கு வளம் தந்த பேராறு, தன்பொருநை, தன்னான் பொருநை எனப் பலவற்றான் அழைக்கப்பெறும். பொருநையாற்றுப் பாய்ச்சல் வஞ்சிக்குப் புகழ் அளித்தது. வற்றாப் பெருவெள்ளம் பாயும் பொருநை, வஞ்சிமா மாநகரை வளைத்து ஒடி, அந்நகர்க்கு இயற்கை அரணாக அமைந்தது. பொருநையாற்று நீர், வஞ்சியின் புறமதிலுக்கு முத்தம் தருதல் போல் பலகால் மோதிப் பாய்ந்தோடும் காட்சி காண்டற்கு இனிது. கருவூர் என்ற பிரிதொரு பெயர் பூண்ட வஞ்சிநகர்த் துறையில், ஆன் பொருதைநீர் அடித்துக் கொணர்ந்து குவிக்கும் தூய வெண் மணலில் வஞ்சி மக்கள், மாலைக் காலத்தில் விரும்பிவந்து வீற்றிருந்து வீடு திரும்புவர். வஞ்சி மாநகரின் வஞ்சிக் கொடியார், தம் திண்ணைகளில் அமர்ந்திருப்பார் போல், அம்மணல் மேட்டில் இருந்து, தம் கைவளை ஒலிக்கக் கழங் காடி மகிழ்வர். - இவ்வாறு வஞ்சியர் நகரின் வளம்பெருக்கி, அரண் அளித்துப் புகழ் பரப்பியும், மணல் குவித்து அந்நகர் மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டியும் ஓடிற்று அவ்வான்பொருநை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/11&oldid=888806" இலிருந்து மீள்விக்கப்பட்டது